அந்த பாட்டை கேக்க முடில.! அசல் கோலார் எழுதிய ஜோர்தாலே பாட்டை கழுவி ஊற்றிய ஜேம்ஸ் வசந்தன்

கானா பாடகர் அசல் கோளாறு பாடியிருக்கும் ஜோர்த்தாலே பாட்டை விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் போட்டு உள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அசல் கோளாறு என்கிற வசந்த் குமார். இவர் சென்னையை சேர்ந்த கானா பாடகர். இவர் ஜோர்த்தாலே என்கிற பாட்டின் மூலமாக மிகப் பிரபலமானார். பின்னர் இவருக்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ்ஸில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அவர் அங்கு பெண்களிடம் நடந்து கொண்ட முறை பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

அந்த பாட்டை கேக்க முடில.! அசல் கோலார் எழுதிய ஜோர்தாலே பாட்டை கழுவி ஊற்றிய ஜேம்ஸ் வசந்தன் 1

விளம்பரம்

இதனால் மூன்றாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் அசல் கோளாறு. வெளியே வந்த பின்னர் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தான் தவறான எண்ணத்தில் அவ்வாறு பெண்களை தொடவில்லை. என் வீட்டில் இருப்பது போல் சகஜமாக இருந்தேன். இதனால் தான் மிகவும் மனம் வருந்துகிறேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் பிக்பாஸ் உள்ளே சென்று என்னுடைய தவறை திருத்திக் கொள்வேன் என்று பதிவிட்டிருந்தார். அசல் கோளாறை வெளியே அனுப்ப வேண்டும் என்று பலரும் வெளியிலிருந்து குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அசல் கோளாறு பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  சக்திக்கு தெரிய வந்த உண்மைகள்.! அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் சக்தி.! மௌனராகம் ப்ரோமோ.!

அந்த பாட்டை கேக்க முடில.! அசல் கோலார் எழுதிய ஜோர்தாலே பாட்டை கழுவி ஊற்றிய ஜேம்ஸ் வசந்தன் 3

விளம்பரம்

அதில் அவர், நேற்று ஒரு இளைஞன் என்னிடம் “சார், இந்த ஜோர்தல இருக்குல்ல..?” என்று பேசிக்கொண்டே போனான். அவனை நிறுத்தி “குறுக்கே எதோ சொன்னியே.. அது என்னா?” என்று கேட்டேன். “சார், ஜோர்தல தெரியாதா? எப்படி சார் ஒங்களுக்குத் தெரியாம போச்சி” ன்னு கேட்டான்.
அவன் அதைப்பற்றி படபடவென ஏராளமானத் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போனான். 33 மில்லியன் பார்வையாளர்கள் என்று அவன் சொன்னபோது என் ஆவல் எல்லைமீறிப் போக, உடனே போய் YouTube-ல் பார்த்தேன். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு, சில தேர்வுகள் உண்டு, நமக்கு அது ஒவ்வாமல் போவது இயல்புதான் என்றெல்லாம் தெரிந்தாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு விரக்தி ஏற்பட்டதைத் தடுக்க முடியவில்லை – பல காரணங்களால்!

அந்த பாட்டை கேக்க முடில.! அசல் கோலார் எழுதிய ஜோர்தாலே பாட்டை கழுவி ஊற்றிய ஜேம்ஸ் வசந்தன் 5

விளம்பரம்

குப்பத்திலும், சேரியிலும் வாழும் இளைஞர் ஏதோ ஒரு வழியில் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி உறுதியுடன் முன்னுக்கு வரவேண்டும் என்று அதிகம் விரும்புபவன் நான். அந்த ஒரே காரணத்துக்காக என்னை தேற்றிக்கொண்டு அந்த இளைஞனை மனதுக்குள் வாழ்த்தினேன். அந்தக் காணொலியில் என்னை மிகவும் துக்கப்படுத்தின விஷயம் – எல்லாவற்றையும் துணிவுடன் நம்பிக்கையுடன் செய்த அந்த கருப்பு இளைஞர் பட்டாளம் நான்கு வெள்ளையானப் பெண்களை நாடிச்சென்றதை மட்டும் ஏற்கமுடியவில்லை. அந்தக் காணொலியின் வெற்றி உன் எழுத்து, பாட்டுத் திறமையா? அல்லது அந்த வெள்ளை நிற இளம் பெண்களின் குறைந்த உடையும், வெட்டும் இடையுமா? உன்னால் பதில் சொல்ல முடியாது தம்பி. நீ வென்றும் தோற்றாய்! என்று பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment