சிம்புவுக்காக யுவன் போட்ட மெட்டை காப்பியடித்து ஜவான் படத்தில் வைத்தாரா அனிருத்.?

வெளியிட்டது

பாலிவுட்டில் முதன்முறையாக களம் இறங்கி இருக்கும் ராக்ஸ்டார் அனிருத் தற்போது ஜவான் படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலையும் காப்பி அடித்து இருப்பதாக தற்போது நெட்டிசங்கள் ஆதாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஜவான். இந்த படத்தின் மூலமாக நயன்தாரா முதல்முறையாக ஹிந்தி திரையுலகிற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

 

அதேபோல் 27 வயதில் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கும் அனிருத்தும் இந்த படம் மூலமாக ஹிந்தி திரையுலகில் என்ட்ரி கொடுக்கிறார். அனிருத் இசை அமைக்கும் முதல் ஹிந்தி படமான ஜவான் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று மொத்தம் மூன்று மொழிகளில் இந்த பாடல் வெளியாகியிருந்தது.

இந்தப் பாடலை கேட்ட பின் பலரும் ராக்ஸ்டார் அனிருத் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். வெளியான மூன்று மொழிகளிலுமே அனிருத் தான் இந்த பாடலை பாடியிருந்தார். தமிழ் திரையுலகை பொருத்தவரை படம் வெளியான பின்பு தான் முழு வீடியோ பாடலை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்பாக லிரிக்கல் வீடியோவை மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் பாலிவுட்டைப் பொருத்தவரை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வீடியோ பாடலை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். படத்தில் இருந்து “வந்த எடம்” என்கிற பாடல் வெளியாகி இருந்தது. ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களுடன் ஷாருக்கான் மற்றும் பிரியாமணி நடனம் ஆடுவது போல அந்த சிங்கிள் பாடல் வெளியாகியிருந்தது.

 

இந்த நிலையில் தற்போது இந்தப் பாடல் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்று படு வைரல் ஆகி வருகிறது. வழக்கம்போல அனிருத் இந்த பாடலையும் காப்பி அடித்து விட்டதாக தற்போது நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத்தை சுற்றி எப்போதும் காப்பி அடிக்கும் சர்ச்சை சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதன்படி தற்போது வந்த இடம் பாடலின் டியூனை மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த வாய்ஸ் ஆப் யூனிட்டி என்கிற தீம் மியூசிக்கில் இருந்து அனிருத் திருடி இருப்பதாக ஒப்பிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ இது வலிமை படத்தில் வரும் நாங்க வேற மாதிரி பாடலுக்காக யுவன் இசையமைத்த மெட்டு என்று பதிவிட்டு வர, இதைப் பார்த்த அனிருத் ரசிகர்கள் நாங்க வேற மாதிரி பாடலே அனிருத் போட்ட மரணம் மாஸ் மரணம் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது தான் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்