முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை பார்த்து இருக்கீங்களா? இதோ ஹோம் டூர் வீடியோ.!

வெளியிட்டது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேதா நிலையம் வீட்டை சுற்றி காண்பித்து இருக்கிறார் தற்போது அவரது அண்ணன் மகள் தீபா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வலம் வந்தவர் ஜெ ஜெயலலிதா. இவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம் வீடு கடந்த 1967 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவால் வாங்கப்பட்டது. 24,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தில் 21,000 சதுர அடிக்கு வீடு கட்டப்பட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடந்திருக்கிறது. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா இந்த வீடு கட்டி முடித்த போது உயிருடன் இல்லை, வீடு கட்டி முடிந்த சமயத்தில் அவர் மறைந்து விட்டார் எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் இந்த வீட்டின் பணிகளை முடித்து கிரஹபிரவேசம் செய்து இருக்கிறார். போயஸ் கார்டன் இல்லத்திற்குள் இதுவரை யாருமே சென்றது கிடையாது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட வரவேற்புரை தான் சென்றிருக்க முடியும். அதை தாண்டி யாருமே சென்றிருக்க முடியாது. இன்று ஜெயலலிதா அவர்களின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவரது வீடு முதன்முறையாக மக்கள் பார்வைக்காக வீடியோவாக எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை பார்த்து இருக்கீங்களா? இதோ ஹோம் டூர் வீடியோ.! 1

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சற்று வித்தியாசமானவர். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாருக்கும் அவ்வளவாக தெரியாது. அவருடைய வீடு எப்படி இருக்கும், அவருடைய அறைகள் எப்படி இருக்கும் என்பது இதுவரை எதுவுமே வெளியில் காண்பிக்கப்பட்டது இல்லை. இந்த நிலையில் தற்போது போயஸ் கார்டனில் அமைந்து இருக்கும் வேதா நிலையம் இல்லம் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா ஆகியோரின் வசம் சென்று இருக்கிறது. தற்போது இந்த வீட்டை தீபா சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் தீபா.

இந்த வீடு 1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. வீட்டின் பல பகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தீபா அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். முன்பு அழகிய வளைந்த படிக்கட்டுகள் இருக்கும் அதன் வழியாகத்தான் ஜெயலலிதா மேல் இருந்து இறங்கி வருவார் ஆனால் அந்த இடங்கள் மாற்றப்பட்டு வரவேற்பு அறையாக மாறிவிட்டதாக தீபா கூறினார். மேலும் தனது தந்தை மற்றும் தாயாரும் போயஸ் கார்டனில் வசித்து அறைகள் மாற்றப்பட்டு சமையலறையாக மாற்றப்பட்டு விட்டதாக கூறினார்.


மேலும் ஜெயலலிதாவின் பூஜை அறைகள், சமையலறைகள், முதல் தளத்தில் இருக்கும் பல அறைகள் என்று அனைத்தையும் சுற்றி காண்பித்து தற்போது இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. புரட்சித்தலைவி இரும்பு பெண்மணி என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதாவின் வீட்டை அவர் இறந்த பிறகு அப்போது இருந்த அரசு நினைவு இல்லமாக மாற்ற முயற்சித்தது. அப்படி நிகழ்ந்திருந்தால் அனைவரும் சென்று அந்த வீட்டை சுற்றிப் பார்த்து இருந்திருக்க முடியும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பால் ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு அந்த வீடு சென்று விட்டது. இதனால் ஜெயலிதாவின் வீட்டை பார்க்கவே முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருந்த அதிமுக தொண்டர்களுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தற்போது தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று இந்த வீடியோவை எடுத்து இருக்கிறது் நீங்களும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வேதா நிலையம் வீட்டை பார்க்க காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்