இன்றைய தமிழ் சினிமா மிக முக்கியமாக கவனித்து கொண்டிருக்கும் படம் என்றால் அது “பொன்னியின் செல்வன்” படம் மட்டுமே. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், மாபெரும் பொருட்செலவில் லைகா தயாரிக்க சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு என மாபெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய பாத்திரமான அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ஜெயம், உனக்கும் எனக்கும், எம்.குமரன் சன் அப் மஹாலக்ஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், பூலோகம், தனி ஒருவன் என நல்ல நல்ல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இன்றுவரையில் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள மிக பெரிய திரைப்படம் இதுதான்.
இப்பொது அவர் அகிலன் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொது சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசும் பொது வெளிப்படையாகவே பல விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளார். அப்போது அவர் பற்றிய காசிப் ஒன்று ரசிகர் கூற, “நீங்க அஜித்திற்கு என அட்வைஸ் சொன்னீங்க” என கேட்டார்.
அதற்கு டக்கென சிரித்த ஜெயம் ரவி, ” அவருக்கு நான் என சொல்றது இதெல்லாம் உங்களுக்கே காமெடியா இல்ல, அவரு தலங்க, நான் போய், ந உண்மையாகவே விஜய் சார்வோட மிக பெரிய ரசிகன், ஆனா எனக்கு அஜித் சார் கிட்ட ரொம்பவே பிடிச்ச விஷயம் அவரோட தன்னம்பிக்கை, இந்த பெரிய இடத்தை அவரே தானா உழைச்சி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார், உண்மையாவே எனக்கு அதுல அஜித் சார் ரொம்ப பிடிக்கும்” என கூறினார். அந்த விடியோவை காண….
Video Courtesy – Cinema VIkatan