நாம் ஒன்றிணைத்து மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டும்! ஜுவாலா கட்டா

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனமான காசாகிராண்ட் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தது நிகழ்ச்சியில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜூவாலா கட்டா கலந்துகொண்டு ஊக்கத்தொகை வழங்கினார்.

நாம் ஒன்றிணைத்து மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டும்! ஜுவாலா கட்டா 1
ஜுவாலா கட்டா

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நம்மைவிட சின்னஞ்சிறு நாடுகளில் நிறைய பக்கங்கள் கைப்பற்றுகின்றனர். ஆனால் நாம் ஒன்று இரண்டு பதக்கங்களை வென்று கொண்டிருக்கின்றோம் அத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவவில்லை” என்றார்.

மேலும், ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கட்சி பாகுபாடு இன்றி நாம் அனைவரும் மாணவர்கள் பக்கம் நின்று இதுபோன்ற செயல்களை எதிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்