தமிழ் திரையுலகில் முன்னணி நாகியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1999ம் ஆண்டு வெளியான வாலி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இவருக்கும் சூரியாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மொத்தம் ஏழு படங்களில் இருவரும் ஜோடியாக நடித்தனர் பின்னர் நிஜ வாழ்க்கையிலும் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக மாறிப்போகினர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா, அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலமாக அவர்கள் பல படங்களை தயாரித்து வருகின்றனர். குறிப்பாக கார்த்திக் நடித்துள்ள விருமன் படத்தையும் இந்த 2d என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரித்திருந்தது. இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த சூரரைப் போற்றி திரைப்படம் சமீபத்தில் தேசிய விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து திரைத்துறையில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். திரை துறையில் மட்டுமல்லாது பொது சேவையிலும், கல்வியிலும் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். திருமணம் முடிந்து சில காலமாக ஜோதிகா திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார். 2015 ஆம் ஆண்டில் மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு திரும்பினார்.
பெண்களை முன்னிலைப்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தனது பெற்றோருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ஜோதிகா. அதில் அவரது தாய், தந்தை சகோதரி நக்மா, சகோதரர் போன்ற அனைவருடனும் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி இருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.