செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு இன்று முதலமைச்சர் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கினார். அப்போது பேசிய விக்னேஷ் சிவன் எமோஷனலாகி கண் கலங்கினார். உலக நாடுகள் எடுத்து நடத்த தயங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்திக் காட்டி இருந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ஜூலை மாத இறுதியில் தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளை ஒருங்கிணைப்பதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனை போட்டி அமைப்பாளர்கள் தேர்ந்தெடுத்தனர். விக்னேஷ் சிவன், வரவேற்பு குழு பாடல் தொடங்கி விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா மற்றும் இறுதி விழா என்று அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். ஒரு சிறு தவறு கூட நடைபெறவில்லை. இதனால் பலரின் பாராட்டுகளையும் விக்னேஷ் சிவன் பெற்று இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுடன் திருமணத்திற்குப் பிறகு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதை உதயநிதி ஸ்டாலின் மூலமாக விக்னேஷ் சிவன் பெற்று இருந்தார். போட்டிகளை நேர்த்தியாக ஒருங்கிணைத்து இருந்ததால் பலரின் பாராட்டுகளையும் அவர் பெற்றார். இந்த போட்டிக்கு வந்த பல நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து பிரம்மித்தனர். பலரும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்தினர். இதனால் மனம் மகிழ்ந்து போயிருந்த முதலமைச்சர், இதில் பங்கெடுத்த அனைவரையும் அழைத்து பாராட்டு விழா ஒன்றை நடத்தி இருந்தார். அப்போது அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த விளையாட்டு போட்டியை கச்சிதமாக நடத்தி முடித்த விக்னேஷ் சிவனுக்கும் சான்றிதழ்களும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

அப்போது விக்னேஷ் சிவன் மேடையில் பேசும்போது எமோஷனலாக பேசினார். தனது தாய் காவல்துறையில் அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் போலீசின் மகன் என்று சொல்லி ஆங்காங்கே ஓரமாக நின்று இது போன்ற விழாக்களை பார்த்து வந்தேன். ஆனால் தற்போது முதலமைச்சர் முன்னிலையில் இது போல் ஒரு விழாவில் நின்று பேசுவது தனக்கு மிகுந்த எமோஷனலாக உள்ளது, என்று விக்னேஷ் சிவன் பேசினார். அப்போது அவரது தாயை மேடைக்கு அழைத்து வந்தார் விக்னேஷ் சிவன். அவரது தாய், முதலமைச்சரிடம் இது போல் ஒரு வாய்ப்பு தன் மகனுக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது, நாளைக்கே என் வாழ்வு முடிந்தால் கூட திருப்தியாக இருக்கும் எனக்கூறி முதலமைச்சரிடம் கண்கலங்கினார். அதை பார்த்த விக்னேஷ் சிவனும் எமோஷனல் ஆகி கண்கலங்கி அழுதார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Kalaignar Seithigal