Categories: சினிமா

தலைகீழாக நின்று வெறித்தனமாக Work Out செய்யும் ஜோதிகா.! சூர்யாவுக்கே Tough குடுப்பாங்க போலயே..!

வெளியிட்டது

நடிகை ஜோதிகா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜோதிகா இன்னும் கொஞ்ச நாளில் சூர்யாவுக்கே டஃப் கொடுப்பார் போல என்று பதிவிட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1998 ஆம் ஆண்டு டோலி சஜா கே ரக்னா என்கிற படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு வாலி என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, சிநேகிதியே போன்ற பல வெற்றி படங்களில் அடுத்தடுத்த வருடங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தது. தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜோதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தலைகீழாக நின்று வெறித்தனமாக Work Out செய்யும் ஜோதிகா.! சூர்யாவுக்கே Tough குடுப்பாங்க போலயே..! 1

சமூக அக்கறை உள்ள ஜோதிகா தற்போது பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 36 வயதினிலே, ராட்சசி போன்ற பெண்களை மையப்படுத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளியான உடன்பிறப்பே திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை. தற்போது ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்கிற படத்திலும் ஹிந்தியில் ஸ்ரீ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதில் காதல் தி கோர் திரைப்படம் தற்போது நிறைவடைந்து இருக்கிறது விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது ஜோதிகா தமிழ்நாட்டில் இருந்து மும்பையில் குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அப்போது ஏதாவது ஒரு வீடியோவை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும் தனது கணவர் போலவே அவரும் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் ஜோதிகா, தற்போது அதேபோன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் தலைகீழாக நின்று பல உடற்பயிற்சிகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்