விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ப்ரியங்கா தேஷ்பாண்டே தற்போது லண்டனில் நடு ரோட்டில் நின்று கொண்டு நடனமாடி கொண்டிருக்கிறார். இன்று அவருக்கு 31வது பிறந்தநாள். பிறந்தநாள் Vibe ஆக அவர் லண்டனில் நடு ரோட்டில் குத்தாட்டம் போடும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் சுமார் 15 ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. ப்ரியங்காவின் பெற்றோர்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்தனர். பின்னர் கர்நாடகாவுக்கு குடி பெயர்ந்தனர். அங்கு தான் ப்ரியங்கா பிறந்தார். பின்னர் சென்னைக்கு வந்த ப்ரியங்கா இங்கு தான் தனது பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகம் ஆன இவர் சுட்டி டிவி, சன் மியூசிக், சன் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர். ஊ சொல்றியா ஊ ஊ ஊம் சொல்றியா, சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லிபெல்லி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர்கள் இருவரும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ப்ரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவருக்கு அவரது காதலன் ப்ரவீனுடன் 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை ப்ரியங்கா மறுத்து இருந்தார். ஆனால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் இணைந்து வெளியில் எங்கும் செல்வது கூட இல்லை. ப்ரியங்கா தற்போது அவரது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். அவருக்கு தற்போது 31வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.அவர் லண்டனில் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அப்போது பிறந்தநாள் Vibe ஆக அவர் நடு ரோட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O