சூர்யாவுக்கும் ஷிவானிக்கும் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம்.! தடுத்து நிறுத்த வருவாளா வெண்ணிலா??

காற்றுக்கென்ன வேலி சீரியலில் தற்போது சூர்யாவிற்கும் ஷிவானிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிவானியை திருமணம் செய்து கொள்ள சூர்யா ஒப்புக்கொண்ட நிலையில், அதை தடுக்க வெண்ணிலா வருவாரா? இல்லையா? என்கிற அதிரடியான ப்ரோமாவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. ஆணாதிக்க மனப்பாங்கு கொண்ட தந்தை படித்து முடித்தவுடன் வெண்ணிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். அவரிடம் இருந்து தப்பித்து செல்லும் மகள் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சாரதா என்பவரிடம் சரண் அடைகிறார். சாரதா தனது கல்வி நிறுவனத்தில் வெண்ணிலாவை படிக்க வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். அதன்படி வெண்ணிலா சாரதா நடத்தி வரும் கல்லூரியிலேயே படிக்க இடமும் கிடைக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கும் ஷிவானிக்கும் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம்.! தடுத்து நிறுத்த வருவாளா வெண்ணிலா?? 1

விளம்பரம்

இதற்கிடையில் சாரதாவின் மகன் சூர்யாவுக்கு வெண்ணிலாவை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. பின்பு வெண்ணிலா மீது அவருக்கு அனுதாபம் ஏற்படுகிறது. நாளடைவில் இந்த அனுதாபம், காதலாக மாறுகிறது. வெண்ணிலாவை கடைசியாக திருமணமும் செய்து கொள்கிறார் சூர்யா. ஆரம்பத்தில் சூர்யா மீது காதலில் இருக்கும் வெண்ணிலாவிற்கு பின்னர் சூர்யாவை சிறிதும் பிடிக்கவில்லை. திருமணத்திற்கு பின்னர் அவர் சூர்யாவை முற்றிலும் வெறுத்து ஒதுக்க தொடங்குகிறார். இதனால் மனமுடைந்து போன சூர்யா ஒரு கட்டத்தில் தனக்கு வேறு பெண் பார்க்கும் படியும், அவருடன் நிச்சயம் செய்து கொள்ளவும் அவர் விருப்பம் தெரிவித்தார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் தற்போது சூர்யாவிற்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். அவருடைய குடும்ப நண்பராக இருக்கும் சிவானியையே அவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

தொடர்புடையவை  திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல்

சூர்யாவுக்கும் ஷிவானிக்கும் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம்.! தடுத்து நிறுத்த வருவாளா வெண்ணிலா?? 3
இதனால் தற்போது வெண்ணிலாவிடம் செல்லும் சூர்யா தனக்கு நிச்சயம் இன்று நடைபெறுகிறது. ஆறு மணி வரை நேரம் இருக்கிறது. அதனால் ஆறு மணிக்குள் வந்தால் கூட இந்த நிச்சயதார்தத்தை நிறுத்தி விடலாம் என்று சொல்கிறார்.்ய நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. வெண்ணிலா கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க சூர்யாவிற்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. வெண்ணிலா வருவாரா? இந்த திருமணத்தை நிறுத்துவாரா என்பது குறித்து வரும் வாரங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment