Categories: சினிமா

திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட தடை! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

வெளியிட்டது
திரைப்படங்களை ஆன்லைனில் வெளியிட தடை! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 1

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது ஒரு திரைப்படம் வெளியானால் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடும். 50 நாட்கள், 100 நாட்கள் என தாண்டி, 175 நாள்கள் ஓடி வெள்ளி விழா சாதனை படைத்த திரைப்படங்களின் பட்டியல் தமிழ் சினிமா வரலாற்றில் எவ்வளவோ உள்ளது.ஆனால், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு திரைப்படத்தை 2 வாரங்கள் ஓட்டி காட்டுவது திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.இதற்கு, புதிய திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசான அதே நாளில், அத்திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படுவது தான் முக்கிய காரணம்.

இது போன்ற சிக்கல்களை , தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் 25 -ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் கைதி திரைப்படம் சந்திக்கக் கூடாது என்ற நோக்கில் இப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது.அதில், “தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படத்தை, இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என இவ்வழக்கு குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார்கள்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். விஜய்யின் பிகில் திரைப்படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்