Categories: சினிமா

கமல் பிறந்த நாளுக்காக புது போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு.! ஆண்டவர் மாஸா இருக்காரே.!

வெளியிட்டது

இன்று கமலஹாசனின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வித்தியாசமாக வாழ்த்தியிருக்கிறது படக்குழு. திரையுலகில் கலை நாயகனாகவும், உலகநாயகனாகவும் விளங்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்று அழைப்பது வழக்கம். இவர் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகினார். அன்று தொடங்கி இன்று வரை 60 ஆண்டுகளாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வரை சுமார் 230 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். 233 வது படமாக இயக்குனர் சங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 234வது படமாக இயக்குனர் மணிரத்னத்துடன் கை கோர்த்திருக்கிறார் கமலஹாசன்.

கமல் பிறந்த நாளுக்காக புது போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு.! ஆண்டவர் மாஸா இருக்காரே.! 1

சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கமல். கலைக்காக தன்னையே அர்ப்பணித்த நடிகர்களில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கமல்தான். இவர் நடித்த பல திரைப்படங்களில் வெள்ளிவிழா திரைப்படங்களாக இருக்கிறது. இதுதான் அதுதான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாகவே இருந்து வருகிறது. இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் சுமார் 500 கோடி வசூலை பெற்றே சாதனை படைத்திருந்தது. இந்த வயதிலும் பாட்டு டான்ஸ் என பட்டையை கிளப்பி இருந்தார் கமலஹாசன். நடிப்பது மட்டுமில்லாமல் வசனம் எழுதுவது, படங்கள் தயாரிப்பது, இயக்குவது, திரைக்கதை, பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் கமலஹாசன்.

இந்த நிலையில் அவர் இன்று தனது 68-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராகவே மாறி இருக்கிறார் கமல். இதனால் கமலின் பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இன்று காலை தனது அண்ணன் சாருஹாசன் குடும்பத்துடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் இந்தியன் 2 படக்குழுவினர் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசனை வாழ்த்தியிருக்கினர். அந்த புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர் நீங்களும் அந்த புகைப்படத்தை காண..! Twitter original source from: Red Giant Movies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்