ஈஸ்வரி இவன வெளிய அடிச்சு துரத்து.! வீட்டிற்கு வந்த கோபியை அடித்து துரத்திய ராமமூர்த்தி..!

பாக்கிய லட்சுமி சீரியலில் கோபி மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு சென்று இருக்கும் காமெடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குடும்பப் பாங்கான தொடர்களை எடுப்பதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டிவி. அந்த வகையில் குடும்பத்தின் அருமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. முதல் மனைவி பாக்யாவை பிரிந்து இரண்டாவதாக தனது தோழி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார் கதாநாயகன் கோபி.

ஈஸ்வரி இவன வெளிய அடிச்சு துரத்து.! வீட்டிற்கு வந்த கோபியை அடித்து துரத்திய ராமமூர்த்தி..! 1

விளம்பரம்

தற்போது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் அவர் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார். ராதிகாவிற்கு சமைக்க தெரியாது. மேலும் ஒரு காபி கூட போட்டுக் கொடுப்பதில்லை. இதனால் கோபிக்கு பல இடங்களில் நெருக்கடிகள் ஏற்படுகிறது. நேற்று மயூவின் தந்தையாக பள்ளிக்குச் சென்ற கோபிக்கு பல அவமானங்கள் நடந்தது. பள்ளியில் இருந்த மகள் இனியாவை பார்த்தவுடன் கோபி அவரிடம் சென்று பேசியது ராதிகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் ராதிகா கோபத்தில் கோபியிடம் கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இப்படி தொடர்ந்து ராதிகாவும் கோபிக்கும் சண்டை நடந்தே வருகிறது.

தொடர்புடையவை  ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா சீசன் 2வின் டைட்டில் சாங் இதோ.!

ஈஸ்வரி இவன வெளிய அடிச்சு துரத்து.! வீட்டிற்கு வந்த கோபியை அடித்து துரத்திய ராமமூர்த்தி..! 3

விளம்பரம்

தற்போது கோபி ரேஷன் கார்டு வாங்குவதற்காக பாக்கியாவின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு கோபியை அவமானப்படுத்தி கோபியின் அம்மாவும் அப்பாவும் அனுப்பிவிடுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment