ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா சீசன் 2வின் டைட்டில் சாங் இதோ.!

பாரதி கண்ணம்மா சீரியலின் சீசன் 2 வின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சீசன் 1 தற்போது முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் சீசன் 2 ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த புதிய சீசனில் பாரதியாக சன் தொலைக்காட்சியில் ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சிபு சூரியன் நடிக்க இருக்கிறார். கண்ணம்மாவாக தற்போது நடித்து வந்த வினுஷா தேவியே நடிக்க இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்ற நாடகங்களை இரண்டாம் பாகம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள், ராஜா ராணி போன்ற பல தொடர்கள் சீசன் 2 எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மூன்று வருடங்களாக மிகுந்த வரவேற்பு பெற்றிருந்த பாரதி கண்ணம்மா தொடரும் விரைவில் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா சீசன் 2வின் டைட்டில் சாங் இதோ.! 1
தற்போது இந்த சீசனில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ரோஜா தொடரின் நாயகன் சிபு சூரியன் நடிக்க இருக்கிறார். பாரதி கண்ணம்மா போலவே ரோஜா சீரியலும் மிகுந்த வரவேற்புக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான ஒரு சீரியலாகும். இருந்தபோதிலும் இந்தத் தொடருக்கு இளம் ரசிகர்களுடைய மிகுந்த வரவேற்பு பெற்று இருந்தது. இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூரியனும் ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும் நடித்து இருத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு நாடகத்தில் நடிக்க இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரியங்கா தற்போது சன் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்கிற சீரியலுக்கு சென்று விட்டார். இதனால் சிபு சூரியன் என்ன செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பாரதி கண்ணம்மா சீசன் 2வில் இணைந்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மஹா எனக்கு 3வது மனுஷி தான்.! பொண்டாட்டி கிடையாது.! சூர்யாவின் பேச்சால் மனமுடைந்த மஹா.!

ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா சீசன் 2வின் டைட்டில் சாங் இதோ.! 3
தற்போது இந்தத் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வருகின்ற பிப்ரவரி ஆறாம் தேதி முதல் இந்த புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சீசன் ஒன்றில் கண்ணம்மாவின் அம்மா கதாபாத்திரம் இறந்துவிட்டது போல் காட்டப்பட்டது. தற்போது கண்ணம்மாவின் அம்மா தீபா ஷங்கர் உயிருடன் இருப்பதாக காட்டப்படுகிறார். இதனால் கண்ணம்மாவின் அம்மா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவருடன் பாரதியின் அம்மா சௌந்தர்யா கதாபாத்திரமும் காட்டப்படுகிறது. இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.! அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment