Categories: அரசியல்

கமலேஷ் திவாரி கொலைவழக்கு: கதைகளின் கதை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் பார்ப்பனீய இயக்கமான “ஹிந்து சமாஜ்” கட்சியின் நிறுவனர் கமலேஷ் திவாரி, கடந்த வெள்ளிக்கிழமை (அக்,18) கழுத்து அறுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தனது பாணியில் முஸ்லீம்கள் மீது குற்றசாட்டிஇருந்த நிலையில், அவரது கொலை உள்ளூர் பாஜக தலைவரால் சதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்குமுன்னர், பாஜக தலைமையில் சதி செய்யப்பட்டுள்ளதாக திவாரி பேஸ்புக்கில் வீடியோ ஒன்றினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கோயில் தகராறு” தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர் சிவகுமார் குப்தா என்பவருடன் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்திருப்பதாக திவாரியின் தாயாரும், அவரது மருமகனும் குற்றசாட்டியுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டும் சிவகுமார் குப்தா நிழல் உலக தாதா போல் செயல்படுவர் என்றும், அவர் மீது 500க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், முகமது நபியை இழிவாக பேசியதால் விளைவாக அவரது தலைக்கு கெடு விதித்திருந்தாக முஸ்லீம் மத குமார்கள் மீது திவாரியின் மனைவி புகார் செய்துள்ளார்.

கமலேஷ் திவாரி கொலைவழக்கு: கதைகளின் கதை! 1

திவாரின் கடந்த பேஸ்புக் பதிவின் போது, பாஜக தலைவர்கள் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாகவும், யோகி ஆதித்தியநாத் அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் திவாரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை அகற்றியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வீடியோ பதிவில் மேலும் கூறியிருந்த திவாரி, “பாஜக தலைவர்கள் மிக பெரிய சதியை அரங்கேற்ற திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நானோ இந்துகளுக்காக போராடி கொண்டு இருக்கிறேன். தற்போது நான் தனியாக தான் களத்தில் நிற்கிறேன் என்பதை சொல்ல விருப்பப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கொலை சம்பந்தமான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகின. அதில் காவி நிற குர்தா அணிந்தபடி இருவர் கொலை நடந்த அன்று திவாரியின் இல்லத்திற்கு வந்திருந்தனர் என்பது உறுதியாகியுள்ளது.

திவாரியின் இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து டீ குடித்தபடியே பேசி இருக்கிறார்கள். அதன் பின்னரே கொலை செய்யபட்டிருக்கிறார். இவர்கள் நிச்சயமாக திவாரிக்கு நன்கு அறிமுகமான பார்ப்பனீய அமைப்பை சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரில், மூன்று பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர், மற்ற இருவர் மேற்கு உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் மதகுருமார்கள் ஆகியோர் உள்ளடங்குவர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நபிகளுக்கு எதிராக திவாரி பேசியிருந்த போது, சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கொலை மிரட்டல் பதிவானது. தற்போது நடந்துள்ள கொலையை முன்னிலைப்படுத்தி இந்து-முஸ்லீம் ஆகிய சமூகங்களுக்கு இடையே வன்மத்தை ஏற்படுத்தும் வகையில், பார்ப்பனீய ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த மாதத்தில் திவாரி உட்பட இது வரை 4 பார்ப்பனீய தலைவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்