முழு அசுரனாக மாறிய சூர்யா..!அனல்பறக்க வெளியாகிய கங்குவா படத்தின் ட்ரைலர்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்பத்தில் சினிமாவில் சாதிக்க போராடிய இவருக்கு இயக்குனர் பாலாவின் படம் பெரும் கைகொடுத்து தூக்கியது. பாலா இயக்கிய நந்தா படத்தில் இருந்து நடிகர் சூர்யாவின் ரேஞ்ச் தமிழ் சினிமாவில் மாறியது. பின்னர் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து , காக்க காக்க , ஆறு என பல வெற்றிபடங்களை கொடுத்து இன்று தனக்கான ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

முழு அசுரனாக மாறிய சூர்யா..!அனல்பறக்க வெளியாகிய கங்குவா படத்தின் ட்ரைலர்..! 1

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இப்படம் அக்டொபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் , இப்படத்தின் ட்ரைலரை தற்போது இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. படத்தின் எதிர்பார்ப்பினை ட்ரைலர் அதிகரித்துவிட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் வெற்றிபெறவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SAREGAMA TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்