Categories: சினிமா

சர்தார் படத்துக்கு பின் தண்ணீர் விஷயத்தில் கார்த்தி செய்து வரும் நல்ல விஷயம்.! அவரே சொன்ன விஷயம்.!

வெளியிட்டது

சர்தார் படத்திற்கு பின்னர் தான் இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருவதாக கார்த்திக் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். பிரபல நடிகர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் சர்தார். நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்திக் தற்போது சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் குறித்த படம் ஒன்றில் தற்போது நடித்திருக்கிறார். பருத்திவீரன் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் கார்த்தி. அதற்கு பின்னர் இவர் பல ஹிட்டான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விருமன் படம் கிராமத்து கதை அம்சங்களுடன் உருவாகி இருந்தது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.

சர்தார் படத்துக்கு பின் தண்ணீர் விஷயத்தில் கார்த்தி செய்து வரும் நல்ல விஷயம்.! அவரே சொன்ன விஷயம்.! 1

 

பின்பு கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவனாக நடித்திருந்தார். இந்த படம் வசூலை வாரி குவித்து வருகிறது. பல நடிகர்கள் நடிக்க விரும்பி நடிக்க முடியாமல் போன கதாபாத்திரம் தான் வந்திய தேவன். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பில் அசித்து இருந்தார் நடிகர் கார்த்தி. இந்த நிலையில் சமீபத்தில் கார்த்தியின் மற்றொரு படமான சர்தார் வெளியாகி இருந்தது. இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கி இருந்த இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். கார்த்திக்குடன் இணைந்து ராசி கண்ணா, லைலா, முனீஸ்காந்த், ரஜ்யா விஜயன் போன்ற பல நடித்திருந்தனர். ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் குறித்து இந்த படம் பேசியிருந்தது.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் தண்ணீர்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டது தான் விற்கப்படுகிறது. இதனால் பல நோய்கள் உருவாகின்றது. அதற்கு காரணம் தண்ணீர் இல்லை, குடிதண்ணீர் அடைத்து விற்கப்படும் மட்டமான பிளாஸ்டிக் தான் என்பது குறித்து கதை பேசி இருந்தது. தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கும் கார்த்திக், அமெரிக்காவில் எல்லாம் தண்ணீர் கேட்டால் கூலிங்காக இருக்கும் தண்ணீர் தான் கொடுப்பார்கள். ஏனென்றால் பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் நச்சுத்தன்மை தண்ணீரில் கலந்து விடும் என்கிற காரணத்தினால் தண்ணீரை பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்து தான் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் அது போன்று செய்வது கிடையாது. வெளியில் செல்லும்போது நம்மால் தண்ணீரை கையில் எடுத்துச் செல்ல முடியும்.

ஆனால் நாம் யாரும் அவ்வாறு கையில் எடுத்துச் செல்வதில்லை. பிளாஸ்டிக் பாட்டிலை தான் வாங்கி குடிக்கிறோம். இப்போது நான் எங்கு சென்றாலும் ஒரு பத்து லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு செல்கிறேன். இந்த படத்தை இயக்குனர் என்னிடம் கூறும்போது நான் இந்த வழக்கத்தை கையில் எடுத்து விட்டேன். ஆனால் என் மனைவி முன்பிருந்தே இந்த வழக்கத்தை கொண்டிருக்கிறார். முடிந்தவரை தண்ணீரை வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதன் மூலமாக நோயிலிருந்து நம்மால் மீள முடியும் என்று பேசியிருந்தார். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை கண்டிப்பாக தவிர்த்து நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக பேசியிருக்கிறது சர்தார் படம்.

Youtube video code embed credits: Indiaglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்