தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்…வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்”!!

15 ஆண்டுகள் முன் அறிமுகமாகி இப்பொது வரையிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியா சினிமாவை இப்பொது வரையில் தன்னுடைய கண்ட்ரோலில் வைத்துள்ள அவர், கடந்த ஜூன் மாதம் நீண்ட கால காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமண செய்து கொண்டார். சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்று முடிந்தது.

தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்...வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்"!! 1

விளம்பரம்

பிரபலங்களின் நிகழ்ச்சிகள் என்றால் எப்போதும் மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது வழக்கமே. ஆனால் நயந்தாரா திருமணத்தால் எந்த வித ஒரு சின்ன கசிவும் இருந்து விட கூடாது என்பதற்காக வருபவர்களுக்கு கூட போன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய பெரிய செலிபிரிட்டிகளிடமும் இது கடைபிடிக்கப்பட்டது.

தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்...வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்"!! 3
Pic courtesy – Netflix India Instagram handle

இதற்கு முக்கிய காரணம் தங்களது திருமண நிகழ்வை ஒளிபரப்ப தனியார் OTT தளமான நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கு தொகையாக 25 கோடி அந்த நிறுவனம் சார்பில் அளிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பொது அவர்கள் திருமணம் முடிந்து ஒருமாத காலமாகியும் அந்த நிறுவனம் சார்பில் எந்த வித அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை.

விளம்பரம்
தொடர்புடையவை  43 வயதில் மலர்ந்த காதல்.! பிரபல நடிகையுடன் காதலை உறுதி செய்த நடிகர் வினய்.! யாருனு தெரியுமா?

தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்...வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்"!! 5

இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் பொது எடுக்கப்பட்ட போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நெட்டபிலிக்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாகவே தன்னிச்சையாக அவர் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது.

விளம்பரம்
தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்...வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்"!! 7
Pic courtesy – Netflix India Instagram handle

சில நாட்களாகவே நெட்பிலிக்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பி கேக்கிறார்கள், நோட்டீஸ் அனுப்பினார்கள் என பலவகையிலான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் சில தினங்கள் முன்பு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து அந்த நிறுவனம் தங்களுடைய அதிகாரபூர்வ அறிவிப்பாக அவர்களின் திருமண வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவித்து இது வரையில் வெளிவராத சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ குறித்து தற்போது நடிகரும், இயக்குனருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது முன்பே தெரிந்த விஷயமே.

தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்...வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்"!! 9

விளம்பரம்

மெஹந்தி, சங்கீத், திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகள், விருந்தினர்களுடனான உரையாடல் என அனைத்து நிகழ்வுகளையும் ஒரு மணி நேரம் மற்றும் 30 நிமிட காட்சிகளாக பல்வேறு சீரிஸ்களாக ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாம் நெட்ஃபிளிக்ஸ். ஆதலால் ஒவ்வொண்டிற்கும் ஒவ்வொரு விடியோக்களை தனியாக வடிவமைத்து வருகிறாராம் கவுதம் வாசுதேவ் மேனன்.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வனில் வைரமுத்துக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? போட்டு உடைத்த மணிரத்னம்

தனிதனியாக மெஹந்தி, சங்கீத், திருமணம்...வடிவமைத்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன்"!! 11

விளம்பரம்

இன்னும் இந்த வீடியோ எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை என்றாலும், மிக பெரிய எதிர்பார்ப்பை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது. இப்பொது நயன்தாரா நடிகர் ஷாருக் கான் நடிக்கும் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது மலையாள படம் “கோல்ட்”, தெலுங்கு படம் “காட்பாதர்”, தமிழில் ஜெயம் ரவியுடன் ஒரு படம், அவரின் 75வது படம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரம்

Leave a Comment