Categories: சினிமா

யோவ் நீ இங்கேயும் வந்துட்டியா? ஜெயராமை பங்கமாக கலாய்த்து தள்ளிய நடிகர் கார்த்திக்

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் ஜெயராமை நடிகர் கார்த்தி கலாய்த்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். உன்னை பிளாக் செய்யவும் முடியவில்லை, ரிப்போர்ட் செய்ய முடியவில்லை, சரியான தொல்லையாக இருக்கிறது என்று ஜெயராமின் புகைப்படத்தை பகிர்ந்து அவர் போட்டுள்ள ட்வீட் தற்போது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படம் படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஜெயராம் சரத்குமார், பார்த்திபன், திரிஷா பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

யோவ் நீ இங்கேயும் வந்துட்டியா? ஜெயராமை பங்கமாக கலாய்த்து தள்ளிய நடிகர் கார்த்திக் 1

இந்தப் படத்தில் வந்திய தேவனாக நடிகர் கார்த்திக்கும், ஆழ்வார்கடியான் நம்பியாக நடிகர் ஜெயராமனும் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு புரியும், இந்த கதையில் முதல் பாகத்திலேயே வந்திய தேவனுக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பிக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். நாளை இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை இன்று மொத்தமாக வெளியிட்டிருந்தது படக்குழு. அப்போது ஆழ்வார்கடியான் நம்பியாக நடிக்கும் ஜெயராமன் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்கள். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்த்திக், இங்கேயும் வந்து விட்டாயா? உன்னை பிளாக் செய்யவும் முடியவில்லை, ரிப்போர்ட் செய்யவும் முடியவில்லை, சரியான தொல்லையப்பா என்று காமெடியாக பதிவிட்டுள்ளார்.

இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நாளை ட்ரெய்லரை வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது படக்குழு. இதில் கமலஹாசன் ரஜினிகாந்த் முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. ட்ரைலர் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே டீசர், பாடல்கள் என வெளியாகி அனைத்தும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதால் நாளை ட்ரெய்லருக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்