நடிகர் அஜித் குறித்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அஜீத்குமார் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை. ஆனாலும் அவரது புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது. இதை அவரது ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருவது உண்டு. அப்படித்தான் சமீபத்தில் மஞ்சு வாரியருடன் இணைந்து அவர் லடாக்கில் பைக் ரைடு சென்று இருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதை மஞ்சுவாரியரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார் என்று பாராட்டி இருந்தார். இந்த நிலையில் அஜித் பைக் பற்றிய ஒரு தகவல் வைரலாகி இருக்கிறது.
Ajith's Supremacy in News Channels#FraudCitizenAjithpic.twitter.com/S3tvAnFcuQ
— JD Trolls 🙂 (@JD_Trolls2) September 4, 2022
அஜித் பயணம் மேற்கொண்ட பைக்குக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது தற்போது பிஎம்டபிள்யூ ஆர் 1200 என்ற மாடல் பைக்கில் சென்றிருந்தார் இந்த பைக்கின் என் தெளிவாக தெரியும்படி புகைப்படங்கள் வெளியானது. அந்த பைக்கில் நெவர் கிவ் அப் என்ற வாசகமும் இடம் பெற்று இருந்தது. அப்படியென்றால் என்ன நடந்தாலும் விட்டு விடாதே என்று பொருள். இந்த பைக் எண்ணைப் பார்த்த நெட்டிசன்கள் தற்போது பைக் குறித்து தேடியுள்ளனர். அந்த பைக் சவுத் சென்னையில் நவம்பர் 2019ம் ஆண்டில் அஜித் குமார் பெயரில்பதியப்பட்ட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த பைக்கின் இன்சூரன்ஸ் ஏற்கனவே முடிந்து விட்டதை நெட்டிசன்கள் கவனிக்க தவறவில்லை. நவம்பர் 2020ம் ஆண்டே முடிந்த இன்சூரன்ஸ் பைக்கை அஜீத் ஓட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பைக் இன்சூரன்ஸ் பண்ணுங்க அஜீத், ப்ராடு சிட்டிசன் அஜீத் என்ற ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: NewsTamil 24×7