ஸ்ரீமதியை தத்ரூபமாக வரைந்த காத்து கருப்பு கலை.! நீ வேற லெவல் யா..குவியும் வாழ்த்துக்கள்

வெளியிட்டது

டிக்டாக் செயலி நமது ஊரில் பிரபலமான பின்பு பலரும் அந்த செயலியின் மூலமாக தங்களை பிரபலப்படுத்திக் கொண்டனர். டிக் டாக் செயலி முடங்கிய பின்பு youtube வலைதள பக்கத்தில் சேனலைத் தொடங்கிய அவர்கள், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். youtube வலைதள பக்கங்களில் பணம் கிடைக்கும் என்பதால் பலரும் இஷ்டத்திற்கு ஒரு சேனலை தொடங்கி அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலர் அளவுக்கு மீறிய பேச்சுக்களால் ஜெயிலில் கம்பி எண்ணியும் வருகின்றனர். பலர் தங்களை தாழ்த்திக் கொண்டும், தங்களை பைத்தியம் போல் காட்டிக் கொண்டும் வீடியோக்களை வெளியிட்டு, அதில் கிடைத்த புகழ் மூலமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருவராக காத்து கருப்பு கலை. அவர் சமீபத்தில் இறந்த கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமதியை தத்ரூபமாக வரைந்த காத்து கருப்பு கலை.! நீ வேற லெவல் யா..குவியும் வாழ்த்துக்கள் 1

 

கலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் ஆவார். பைத்தியக்காரத்தனமாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். தனது குரலை மாற்றி கரகரவென வைத்துக்கொண்டு பாடி வீடியோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிணம் போல் வேடம் அணிந்து நடந்து செல்வது, திடீரென நடனம் ஆடுவது என்று இவர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். பலரும் இவரை பைத்தியம் என்றும், லூசு என்றும் திட்டி வந்த நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாத காத்து கருப்பு களை தொடர்ந்து youtube-ல் வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார். அதன் மூலமாக தற்போது கியா ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

அவரை பலரும் திட்டி தீர்த்து வந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார், அந்த வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ச்சியில் அவரை பாராட்டி வருகின்றனர். ஒன்றுக்கும் உதவாமல் இப்படி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் என்று பலரும் அவரை திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் அவருக்குள்ளும் சில திறமைகள் இருக்கவே செய்கின்றன. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் மறைந்த மாணவி ஸ்ரீமதியின் உருவத்தை அப்படியே வரைந்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் காத்து கருப்பு கலையை, நீ செய்த எத்தனையோ வீடியோவிற்காக உன்னை திட்டி இருக்கிறேன், ஆனால் இந்த வீடியோ என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என்றும், உனக்கு பல திறமைகள் இருக்கிறது என்றும் காத்து கருப்பு கலையை பாராட்டி வருகின்றனர். ஸ்ரீமதியின் படத்தை தத்ரூபமாக வரைந்த காணொலியை அவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண…Watch the below video..

Youtube Video Code Embed Credits: Kathukaruppu Kalai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்