தாய் கிழவின்னு யாரும் கூப்புடாதீங்க.! அது எனக்கு புடிக்கல, என் பெயர் அது இல்ல..! கோரிக்கை விடுத்த நித்யா மேனன்

இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி இருந்த படம்தான் திருச்சிற்றம்பலம். இந்த படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வெளியான 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வெளியான முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும், பின்னர் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது. அனிருத் இசையில் இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக தாய்க்கிழவி, மேகம் கருக்காதா, தேன்மொழி பூங்கொடி போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தாய் கிழவின்னு யாரும் கூப்புடாதீங்க.! அது எனக்கு புடிக்கல, என் பெயர் அது இல்ல..! கோரிக்கை விடுத்த நித்யா மேனன் 1

விளம்பரம்

 

இந்தப் படத்தில் குறிப்பாக பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருந்தது நித்யா மேனனின் கதாபாத்திரம்தான். நித்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கும் அவர், தமிழிலும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் திருச்சிற்றம்பலத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் தனக்கும் சோபனா போல் ஒரு தோழி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு தனுசுடன் மிக அழகாக நடித்திருப்பார் நித்யா மேனன். பலரும் இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனருக்கு நன்றியும் தெரிவித்தனர். கடுமையான திரை விமர்சனங்கள் செய்யும் விமர்சகர்கள் கூட நித்யா மேனன் நடிப்பை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்..! முதல் போட்டோஷூட் எடுத்த அழகிய ஜோடி..!

தாய் கிழவின்னு யாரும் கூப்புடாதீங்க.! அது எனக்கு புடிக்கல, என் பெயர் அது இல்ல..! கோரிக்கை விடுத்த நித்யா மேனன் 3

இந்த நிலையில் நித்யா மேனன் இரண்டு நாட்களுக்கு முன்பு லைவில் வந்து ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் என்னை யாரும் தாய் கிழவி என்று கூப்பிட வேண்டாம், அது என்னுடைய பெயர் கிடையாது, அது அந்த படத்தில் வரும் கதாபாத்திரம் அதை அதோடு விட்டு விடுங்கள். என்னை தாய்க்கிழவி என்று யாரும் கூப்பிடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the Below Video..

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்

Leave a Comment