சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தற்போது ஒரு வழியாக கயலை சரியான நேரத்திற்கு வந்து எழில் காப்பாற்றி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து வரும் ஒரு சீரியல் தான் கயல் தற்போது இந்த சீரியலில் எழிலுக்கும் ஆர்த்திக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் எழில் தற்போது தனது காதலியான கயலை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இந்த நிலையில் கயலை எழிலின் தாயார் கடத்தி வைக்க, அவரைத் தேடி எழில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கயலை கடத்தி வைத்திருக்கும் இடத்தை எழில் கண்டுபிடித்து அவரை மீட்கிறார். இதனால் கயல் சீரியல் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயலும் எழிலும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது கயலின் பெரியப்பா மகள் ஆர்த்திக்கும் எழிலுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் எழிலிடம் தன் காதலை சொல்ல முடியாமல் கயல் தவித்து வருகிறார். ஒரு கட்டத்தில் எழிலின் தாயார் சிவசங்கரி கௌதமை வைத்து கயலை கடத்தி விடுகிறார். மேலும் கயலை கொன்று விடுமாறும் அவருக்கு அறிவுறுத்துகிறார். இதனால் கயலை கடத்தி வரும் கௌதம் வீட்டிற்குள் வைத்து அவரை கழுத்தில் கயிறை கட்டி மின்விசிறியில் தொங்க விடுகிறார். கயிலை காணவில்லை என்று தெரிந்து கொண்ட எழில் தற்போது திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி அவரைத் தேடி ரோடு ரோடாக அலைந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கயலும் எழிலும் ஓடிப் போய்விட்டதாக ஆர்த்தியின் தாயார் வடிவு கயலின் தாயாரை திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் கயல் இருக்கும் இடத்தை எழில் கண்டுபிடித்து அவரை காப்பாற்றி இருக்கிறார். ரவுடிகளை அடித்து துவைத்து விட்டு கதவை திறக்கும் எழில் கயல் மூச்சு திணறி கயிற்றில் தொங்குவதை பார்க்கிறார். அவரைப் சரியான சமயத்தில் எழில் காப்பாற்றி அழைத்துச் சென்றிருக்கிறார். இதனால் சிவசங்கரி செய்த சூழ்ச்சி எழிலுக்கு தெரியவந்து எழில் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு கயலைத் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV