கயல் மீது போலிஸுக்கு வந்த சந்தேகம்.! சிசிடிவியால் வசமாக மாட்டப்போகும் ஆனந்தி.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது போலீசுக்கு கயல் மற்றும் அவரது தங்கை ஆனந்தி மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. பிரபு கொல்லப்பட்ட வழக்கு தற்போது சூடு பிடித்திருக்கிறது. மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வரும் நிலையில் தற்போது ஆனந்தி கையும் களவுமாக மாட்னப் போவது உறுதியாகி இருக்கிறது. கயல் தனது தங்கையை எப்படி காப்பாற்ற போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கயல் மீது போலிஸுக்கு வந்த சந்தேகம்.! சிசிடிவியால் வசமாக மாட்டப்போகும் ஆனந்தி.! ப்ரோமோ இதோ 1

கயலின் தங்ஐஎ ஆனந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார் பிரபு. அப்போது அவரது காலில் பாட்டில் பட்டு வழுக்கி அவர் ஜன்னலில் இருந்த கம்பியில் மோதி உயிரிழந்து விடுகிறார். இந்த விஷயத்தை ஆனந்தி கயலிடம் சொல்கிறார். தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கயல் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திருமண மண்டபத்திற்கு வரும் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கயல் மற்றும் ஆனந்தி இருவரையும் போலீஸ் நிறுத்த சொல்லி இங்கு அழைத்து வருமாறு கூறுகிறார்.

மேலும் ஆனந்தி பயத்தில் உறைந்து போய் அழுது கொண்டிருக்கிறார். கயல் தைரியமாக காட்டிக் கொண்டாலும் அவரும் பயத்தில் இருக்கிறார். இதனால் கயல் மற்றும் ஆனந்தி இருவரும் மாட்டுவார்களா? கொலைக்கான உண்மையான காரணத்தை போலீசார் கண்டுபிடிப்பாரா? கயல் தனது தங்கையை காப்பாற்றுவாரா? என்பது குறித்து பரபரப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்