யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள “லக்கி மேன்” படத்தின் ட்ரைலர் இதோ.!

நடிகர் யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்டேலா, பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களின் வரிசையில் யோகி பாபு தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் லக்கி மேன். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்க, திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள "லக்கி மேன்" படத்தின் ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, அமித் பார்கவ், சாத்விக், ஆர் எஸ் சிவாஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் தற்போது வெளியாகியிட்டுள்ளனர். வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே பார்க்காத ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் அடித்தால் என்ன நடக்கும் என்பதை சுருக்கமாக விவரித்து இருக்கிறது ட்ரைலர்.

யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள "லக்கி மேன்" படத்தின் ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

ஏழ்மையில் இருக்கும் யோகி பாபுவுக்கு ஒரு பெரிய வேலை கிடைக்கிறது. அதன் மூலமாக வசதி வாய்ப்பு கிடைக்கிறது் கூடவே சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குடும்பத்திலும் வெளியிலும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ட்ரைலர் விவரிக்கிறது. “நமக்கு பிடிச்ச விஷயத்தை இயற்கை முதலில் நம்ம கிட்ட இருந்து பறிக்கும்”, “நல்லவனா இருந்தா கடைசி வர நல்லவனா தான் இருக்கனும், சத்தியமா நல்லா இருக்க முடியாது” போன்ற வசனங்கள் கைதட்டல்களைப் பெற்றிருக்கிறது. அந்த ட்ரைலரை நீங்களும் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment