Categories: சினிமா

ஆயுத பூஜை தினத்தில் தனது புது BMW காருக்கு பூஜை போட்ட கீர்த்தி சுரேஷ். !

வெளியிட்டது

தான் புதிதாக வாங்கியுள்ள BMW காருக்கு ஆயுத பூஜையை ஒட்டி படையல் போட்டு சாகி கும்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பூஜை முடிந்தவுடன் தன் நாயுடன் காரில் ஒரு ரவுண்டு போன வீடியோவும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. தமிழின் முண்ணனி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் தற்போது கலக்கி வருகிறார். இவர் தமிழில் நடித்த முதல் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்த ரஜினி முருகனுக்கு பிறகு மிகப்பெரிய புகழ் இவருக்கு கிடைத்தது.

ஆயுத பூஜை தினத்தில் தனது புது BMW காருக்கு பூஜை போட்ட கீர்த்தி சுரேஷ். ! 1

தனுசுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜயுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் விஜயுடன் மீண்டும் சர்க்கார் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த முடித்துள்ளார். டாப் 10 கதாநாயகிகளில் ஒருவராகவும் உயர்ந்திருக்கிறார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக நடந்த படம் என்றால் சாவித்திரி அவர்களின் வரலாற்று காவியமான மகாநடி படத்தில் இவர் நடித்ததுதான். அந்த படத்தில் நடிகையர் திலகம் போலவே நடித்து அசத்தியிருப்பார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. கீர்த்தி சுரேஷின் செல்வாக்கும் அபரிமிதமாக உயர்ந்தது. தற்போது உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜையின் போது தனது புது BMW காருக்கு அவர் மாலையிட்டு படையில் வைத்துள்ளார். மேலும் தனது செல்லப்பிராணியை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பி இருந்தார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் கேரளாவின் பாரம்பரிய உணவையும் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்