திருமணத்தை மறைக்க பேரம் பேசிய அர்னவ்.! ஆடியோவை வெளியிட்டு அம்பலப்படுத்திய திவ்யா

தங்களது திருமண வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்குவதற்காக செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரிடம் நடிகர் அர்னவ் பேரத்தில் ஈடுபட்ட ஆடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. செவ்வந்தி சீரியல் நடிகைக்கும், அவருடன் நடித்த அர்னவுக்கும் 7 ஆண்டுகளாக காதல் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது செவ்வந்தி சீரியல் நடிகை 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.இந்த நிலையில் நேற்று திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அர்னவ் செல்லமா சீரியலில் தன்னுடன் நடிக்கும் பெண்ணுடன் ஒரே அறையில் நெருக்கமாக இருப்பதாகவும், தன்னை அசிங்கமாக திட்டி வயிற்றில் எட்டி உதைத்ததாகவும், அதனால் தனக்கு ப்ளீடிங் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனக்கு கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக கதறி அழுதார்.

திருமணத்தை மறைக்க பேரம் பேசிய அர்னவ்.! ஆடியோவை வெளியிட்டு அம்பலப்படுத்திய திவ்யா 1

விளம்பரம்

ஆனால் அர்னவ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து இருந்தார். தான் திவ்யா ஸ்ரீதரை அடிக்கவே இல்லை. அவர் பொய் சொல்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருந்த விஷயத்தை தன்னிடமிருந்து மறைத்து விட்டார். மேலும் அவருக்கு விவாகரத்து கடந்த ஜனவரின் போது தான் ஆகியிருந்தது. அந்த விஷயத்தையும் தன்னிடம் இருந்து மறைத்து விட்டார். இதை எல்லாம் மறைக்க தற்போது நான் அடித்ததாக கூறிய நாடகமாடுகிறார். இதற்கெல்லாம் அவருடைய ஆண் நண்பர் ஈஸ்வர் என்பவர் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இரவு செய்தியாளர்களை சந்தித்த திவ்யா, திருமண வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்வதற்காக அர்னவ் பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டார்.

தொடர்புடையவை  கடைசி இடத்தில் அமர்ந்து இருக்கும் அசீம், தனலட்சுமி.! வெளியே போனது யாருனு தெரியுமா?

திருமணத்தை மறைக்க பேரம் பேசிய அர்னவ்.! ஆடியோவை வெளியிட்டு அம்பலப்படுத்திய திவ்யா 3

விளம்பரம்

முஸ்லிம் மதத்தை சேர்ந்த அர்னவ் தன்னுடைய குடும்பத்தினர் உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு திவ்யா சம்மதிக்கவில்லை. அதை விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட சூட்டிங் என்று பொய்யாக பேசி பதிவிடுமாறும் அவர் பேசியிருக்கும் ஆடியோவை தற்போது திவ்யா வெளியிட்டு இருக்கிறார். சீரியலில் ஹீரோவாக இருக்கும் அர்னவ் நிஜத்தில் வில்லனாக இருப்பதை அவரது மனைவியே அம்பலப்படுத்தி இருக்கிறார். அந்த முழு செய்தியை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment