Categories: சினிமா

வெள்ளை நிற பட்டுபுடவையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்.! ஓணம் கிளிக்ஸ்

வெளியிட்டது

இந்தியா முழுவதும் ஓணம் பண்டிகை பலரும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷும் ஓணம் பண்டிகையை கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை நிற பட்டுபுடவையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்.! ஓணம் கிளிக்ஸ் 1

வெள்ளை நிறப் பட்டுப்புடவையில் அவர் எடுத்துள்ள அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.


ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ரஜினி முருகன் தான். இந்த படத்தின் மூலமாக பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார்.


தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர்.

கடைசியாக தமிழில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் கடைசியாக இவர் நடித்திருந்த படம் போலோ சங்கர். வேதாளம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கைவசம் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிற புடவையில் அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்