Categories: சினிமா

“இது ஒன்னும் அவளோ தப்பு இல்ல…உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை” ஓப்பனாக பேசிய கிரண்”!!

வெளியிட்டது

தொழில்நுட்பங்கள் மிகவும் வளர்ந்து வரும் காலங்களில் மனிதர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நிறைய வழிகள் உருவாகின. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்கள். குறிப்பாக சில நடிகைகள் குறிப்பாக மேற்கு இந்தியாவில் தங்களுக்கென ஒரு தனி செயலியை(App) உருவாக்கி ரசிகர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இதில் தற்போது சேர்ந்துள்ள மற்றொரு நடிகை கிரண் ராத்தோர்.

"இது ஒன்னும் அவளோ தப்பு இல்ல...உங்க கரிசனம் எனக்கு தேவையில்லை" ஓப்பனாக பேசிய கிரண்"!! 1

தமிழில் 2001-ம் ஆண்டு விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட், ‘வில்லன்’ அஜீத், ‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசன், ‘வின்னர்’ படத்தில் பிரசாந்த், விஜயகாந்த் என டாப் ஹீரோக்களின் முன்னணி கதாநாயகியாக நடித்தவர். தமிழ், தெலுங்கில் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். பட வாய்ப்புகள் திடீரென குறைய அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

நடுவில்  ‘சகுனி’, ‘ஆம்பள’, ‘முத்தின கத்திரிகை’ படங்களில் நாயகி வாய்ப்பு குறைந்ததால் குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார் கிரண். இப்போது இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், எப்போதும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். அந்த பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இப்போது, இவரை குறித்து அந்த ஆப்ஸ் செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவருடைய பெயரிலேயே கிரணின் இணையதளம் மற்றும் ஆப் குறித்து சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று ஆன்லைனில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த ஆப்பில் நடிகை கிரானிடம் பேச, அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை பார்க்க, அவருடன் வீடியோ கால் செய்து பேச என தனித்தனியா பல முறைகள் உள்ளது. இதில் குறிப்பிடும் படியான விஷயம் என வென்றால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு வகையிலான பணம் கட்ட வேண்டும்.

அதாவது கிரணை நேரில் சந்தித்து அரட்டையடிக்க ரூ.1.5 லட்சம், கிரணுடன் 10 நிமிட வீடியோ கால் செய்ய ரூ.15 ஆயிரம், இன்பாக்ஸில் கிரணின் ஹாட்டஸ்ட் புகைப்படங்களை பெற ரூ.1999, ரூ.49 கிரணின் இன்ஸ்டாகிராமில் இல்லாத சில புகைப்படங்கள், இன்பாக்ஸில் கிரணின் இரண்டு ஸ்பெஷல் ஸ்னாப்களுக்கு ரூ.999, வீடியோ அழைப்பில் 25 நிமிடங்களுக்கு கிரணுடன் இணைக்க ரூ.30 ஆயிரம் மற்றும் கிரணுடன் ஒரு வீடியோ அழைப்பில் பேச 15 நிமிடங்களில் ரூ.13 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆப் குறித்த தகவல் வெளியான கொஞ்ச நேரத்துலே அதற்கு மிகவும் பெரிய அளவில் புகார்கள் எழ இப்பொது அந்த தளம் மற்றும் ஆப் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஒரு பிரபல நடிகை வாய்ப்பு குறைந்து பண புழக்கம் இல்லாமல் இருப்பதால் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியது இப்பொது பெரிய பேசும் பொருளாக உள்ளது. இது சமூகவலைத்தளங்களிலும், நிறைய ஊடங்களிலும் மிக பெரிய பேசும் பொருளாகி உள்ளது.

இதற்கு கிரண் தைரியமாக பதில் அளித்துள்ளார். அதாவது பட வாய்ப்புக்காக நான் இவ்வாறு போட்டோக்களை போடவில்லை. எனக்கு சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் அதிகம். இதனால் பொழுதுபோக்கிற்காகவும், என்னை பிஸியாக வைத்துக் கொள்வதற்காகத்தான் இவ்வாறு போட்டோக்களை பகிர்ந்து வருகிறேன். மேலும் அதற்காக சில போட்டோக்களுக்கு கட்டணங்களும் சொல்லி இருக்கிறேன். இதை எனக்கு மிகவும் மன நிறைவுடன் இருக்கிறது. அதனால்தான் இவ்வாறு செயல்பட்டு வருகிறேன் அதை தவறாக சிலர் புரிந்து கொண்டு பட வாய்ப்புக்காக இவ்வாறு செய்கிறேன் என கூறுகிறார்கள் என்று பதிலளித்துள்ளார்.

உண்மையில் அவருடன் வீடியோ காலில் பேச ரசிகர்கள் பணத்தை வாரி கொட்டவும் தான் செய்கின்றனர்.ஏற்கனவே போட்டோக்களுக்கு கட்டணம் வசூலித்து வருவதை விமர்சித்து வந்த ரசிகர்கள் தற்போது இவ்வாறு சொல்லி இருப்பதை அறிந்த கவர்ச்சி காட்டுவதற்கு இப்படி ஒரு விளக்கமாக கிரண் என கலாய்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்