விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாலா தற்போது முதியவர் ஒருவருக்கு சொந்தமாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டை தனது குருவான ராகவா லாரன்ஸ் வைத்து திறப்பு விழாவை நடத்தி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். லட்சக்கணக்கில் அவருக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. சின்னத்திரையில் இருந்த போதிலும் பலருக்கு உதவி செய்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனக்கு வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஏற்கனவே அவர் பல குழந்தைகளைப் படித்து வைத்தும், முதியோர்களையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் ஆட்டோ வாங்கிக் கொடுப்பது, பைக் வாங்கிக் கொடுப்பது, வெள்ளத்தில் உதவி செய்வது என பல நன்மைகளை செய்கிறார். அந்த வகையில் தனது வீட்டருகே பேட்மிட்டன் கோர்ட்டில் செக்யூரிட்டியாக பணிபுரியும் முதியவர் ஒருவரின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக வீடு ஒன்றைக் கட்டி பரிசளித்திருக்கிறார்.
குடிசை வீட்டில் வசித்து வந்த அந்த முதியவர் தனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசையை பாலாவிடம் வெளிப்படுத்த அவருக்காக இந்த வீட்டை கட்டி முடித்திருக்கிறார் பாலா. அந்த வீடியோவிற்கு லைக்களும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!
Instagram Video Embed Code Credits: KPY Bala