நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நிறைய ஹிந்தி படங்களில் தோன்றியுள்ளார். பின்னர் மெதுவாக தெலுங்கில் சண்டிகர் வெங்கடேஷ் நடித்த “கலியுக பண்டாவுளு” என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் ரஜினி, பிரபு நடிப்பில் உருவான “தர்மத்தின் தலைவன்” படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர் “வருஷம் 16” படத்தில் படத்தின முதன்மை நாயகையாக நடித்து இருந்தார்.

தொடர்ந்து பிரபுவுடன் இவர் நடித்த “சின்னத்தம்பி” படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி, ராமராஜன், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்து முதன்மை நாயகி ஆனார். 1980 முதல் கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை முன்னையிலேயே இருந்தார். இவர் ஜெயராம் நடித்த “முறை மாமன்” என்ற படத்தில் சுந்தர்.சி யுடன் பணியாற்றினார். இதன் மூலம் இருவருக்கும் காதல் மலர, 2000அம் ஆண்டு திருமணம் முடித்தார். தமிழ் திரையுலகில் ஒரு நாயகிக்கு முதல் முறை கோவில் கட்டி கும்பிட்டது இவருக்கே ஆகும். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இருவருமே தாய் குஷ்பூவை போலவே கொஞ்சம் குண்டாகவே இருந்தனர். உண்மையில் குஷ்பூ கொஞ்ச உடலெடை பிடித்தே தமிழகத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாகவே குஷ்பூவின் மகள் சினிமாவில் நடிக்க ஆயுத்தம் ஆகி வருவதாக செய்திகல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தியை சண்டிகை குஷ்பூவும் ஆமோதித்துள்ளார், குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் நடிகைகளை பலரும் தங்களது உடலிடையை மிகவும் மெலிதாகவே வைத்து வெற்றி பெற்று வருகிறார்கள்.
இதனால் கொஞ்சம் குண்டாக இருந்த குஷ்பூவின் மகள்கள் மீது சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழ துவங்கின. இப்படி குண்டாக இருந்தால் இப்பொது சினிமாவில் வாய்ப்பெல்லாம் குறைவு என்பதை உணர்ந்த குஷ்பூவின் மூத்த மகள் அனந்திதா உடல் எடை பெரிய அளவில் குறைத்துள்ளார். அந்த புகைப்படங்களி அவர் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் கூட வெளியிட்டுள்ளார். இப்போதும் அவர் மேல் விமர்சங்கங்கள் வந்துகொண்டிருகின்றன.
இப்பொது பேட்டி ஒன்றில் தன மீது வைக்கப்படும் விமரசனைகளை குறித்து அவர் பேசியுள்ளார். அதில் “நான் குண்டாக இருந்த போது பலரும் என்னை என் அம்மாவுடன் ஒப்பிட்டு கேலி செய்தனர். அதே போல நான் ஒல்லியானதும் கிழவி இருக்க ஒரு 16, 17 வயசு பொண்ணு மாதிரியா இருக்கனும்னு கேலி செஞ்சாங்க. அதிலும் ஒரு சிலர் நான் ஆப்ரேஷன் செய்து தான் உடல் எடையை குறைத்தேன் என்கிறார்கள். ஒரு 16 வயசு பொண்ண ஆப்ரேஷன் செய்துகொள்வாரா இது கூடவா தெரியாது ‘ என்று பேசி இருக்கிறார்.
Video Courtesy – AvalGlitz