யோகி பாபுவை கோவிலுக்குள் அனுமதிக்காத நிர்வாகம்.! ஒரு மணி நேரமாக கோவில் வாசலில் காத்திருப்பு

திருத்தணி முருகன் கோவிலுக்குள் தன்னை அனுமதிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதாகவும் தன்னை vip வரிசையில் அனுமதிக்காமல் ஒரு மணி நேரம் நிற்க வைத்ததாகவும் யோகி பாபு திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்திடம் சண்டை போட்டிருக்கும் வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யோகி பாபு இவர் திரைத்துறைக்கு வந்து குறுகிய நாட்களிலேயே 100 படங்களுக்கும் மேல் நடித்து முடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர் பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார். முதன்முதலாக யோகி என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் யோகி பாபு ஆக மாறிப்போனார். தற்போது அந்தகன், அயலான், சுந்தரா டிராவல்ஸ் 2,  ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் தர்ம பிரபு, மண்டேலா போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் அவர் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகி பாபுவை கோவிலுக்குள் அனுமதிக்காத நிர்வாகம்.! ஒரு மணி நேரமாக கோவில் வாசலில் காத்திருப்பு 1
புத்தாண்டையொட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த நடிகர் யோகி பாபு ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் இறங்கும் பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். 5ம் படை வீடான முருகனின் திருத்தணி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காமெடி நடிகர் யோகி பாபு கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக அதிகாலை வந்திருந்தார். அப்போது விஐபிகள் பாதையில் செல்வதற்காக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஐபி பாதையை திறக்கப்படாததால் சுமார் ஒரு மணி நேரமாக காத்திருந்த யோகி பாபு பின்னர் அவர் பக்தர்கள் இறங்கும் பாதியில் சென்று சாமி தரிசனம் செய்தார். தன்னை கோவில் நிர்வாகம் வேண்டும் என்றே ஒரு மணி நேரம் காக்க வைத்து அவமதித்து விட்டதாக அவர் அங்கு சிறிது வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் பக்தர்கள் இறங்கும் பாதையில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வாழை படத்தின் வெற்றிகொண்டாட்டம்..! கலந்துகொண்ட நட்சத்திரங்கள்..!

யோகி பாபுவை கோவிலுக்குள் அனுமதிக்காத நிர்வாகம்.! ஒரு மணி நேரமாக கோவில் வாசலில் காத்திருப்பு 3

விஐபி வழி திறக்கப்படாத காரணத்தால் அவர் பக்தர்கள் வழியில் சென்றார். அப்போது அங்கு கூடி இருந்த மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தும், அவருடன் கை கொடுத்தும் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். பக்தர்கள் அதிக அளவில் யோகி பாபுவை சூழ்ந்து கொண்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்று வழி அனுப்பி வைத்தனர். இதனால் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை சிறிது சலசலப்பு ஏற்ப்பட்டது. அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: News Tamil 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment