தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட குஷ்பூ.! முதல் நாளே பணிகளை தொடங்கினார்.!

வெளியிட்டது

நடிகை குஷ்பூ இன்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அவரே தனது சமூக வலைத்தளர் பக்கத்தில் கெத்தான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. ரசிகர்கள் கோயில் கட்டும் அளவிற்கு ஒரு நடிகை இருந்தார் என்று சொன்னால் அது குஷ்புவிற்கு தான். திருச்சியில் இவரது ரசிகர்கள் இணைந்து இவருக்கு கோவிலே கட்டி இருக்கின்றனர். மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்பூ நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். இவர் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்திருக்கிறார் குஷ்பூ. வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் கை தேர்ந்தவராக இருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட குஷ்பூ.! முதல் நாளே பணிகளை தொடங்கினார்.! 1

சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் நடித்திருக்கிறார். பின்னர் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் தொகுத்து வழங்கிய ஜாக்பாட் என்கிற நிகழ்ச்சியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. மேலும் பல நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு அரசியல் ஆசை வரவே 2010-ம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் வாய்ப்பு வழங்கப்படாததால் 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியிலும் ஆறு ஆண்டுகள் பணியாற்றி வந்த அவர் 2020 ஆம் ஆண்டு விலகி பாரதிய ஜனதா கட்சி இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் குறைவான வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்தார்.


தொடர்ந்து பாஜகவில் தேசிய செயற் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். தொடர்ந்து தேர்தல்களை போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தாலும் தீவிர அரசியலிலும் கட்சிப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்புவிற்கு பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ பதவி ஏற்றிருக்கிறார். இதை அடுத்து பலரும் குஷ்பூவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பதவி ஏற்று கொண்ட முதல் நாளே தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கி இருக்கிறார் குஷ்பூ. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து பேசி வரும் குஷ்பூவிற்கு இந்த பதவி கிடைத்தது ஒரு அங்கீகாரமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து குஷ்பூ சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கும் லைக் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்