Categories: அரசியல்

தலைநகரில் கலவரம்: காவல்துறை தடியடி

டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை தடியடி நடத்தி வருகிறது.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தலைநகரில் கலவரம்: காவல்துறை தடியடி 1

அதேபோல், இன்று பீம் ஆர்மி அமைப்பினர் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக வந்தனர். இப்போராட்டத்துக்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் தலைமை வகித்தார்.

இதேபோல் டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்போது தார்யகஞ்ச் பகுதியில் கார் ஒன்றுக்கு திடீரென தீ வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி வருகிறார்கள். அதே போல் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி கொண்டு அடக்குமுறையை கையாண்டு வருகிறார்கள்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்