தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கிய வான்டட் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இவருடைய முதல் படமான “மாநகரம்” படத்திலேயே மிக பெரிய வரவேற்பை பெற்றார். பின்னர் “கைதி”, இந்த படம் குறித்து மக்களுக்கு ஒருவர் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் வெளியான மிக சிறப்பான அக்ஷன் படம் இது. அடுத்து தளபதியுடன் “மாஸ்டர்”. 2 வருட கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த திரையரங்கு உரிமையாளர்களை மீட்டெடுத்த பிளாக் பஸ்டர் படம் அது .வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக வெளியான படம் “விக்ரம்”. ஒரு விருது விழாவில் தானை தானே கமலின் மிக பெரிய ரசிகன் என குறிப்பிட்ட லோகேஷ், இப்பொது கமலுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். கமல்ஹாசன், பாகத் பாசில், வியாஜ்ஜிய சேதுபதி, சூர்யா என 4 பெரிய நாயகர்களுக்கு சரியான அளவில் ரோல் கொடுத்து அதற்கு ஏற்ப சரியான திரைக்கதை அமைத்து, இப்பொது தமிழ் படங்கள் எடுத்த அதிகபட்ச வசூலை அள்ளி குவித்துள்ளார்.
மாஸ்டர் படமும் மிக பெரிய வெற்றி என்பதால், அடுத்து இவர் விஜயுடன் இணையவுள்ள படத்தின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சொல்லப்போனால் விஜய் ரசிகர்களே எதிர்பார்க்கும் படமாக வாரிசை விட இது அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மலையாள நடிகர்களில் இப்பொது தமிழகத்தில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் கொண்ட நடிகர் என்றால் அது பகத் பாசில் தான். நேர்த்தியான நடிப்பு, மிரட்டும் reaction என அனைத்துமே இவரிடம் அசத்தலாக உள்ள நிலையில் தென்னிந்தியாவின் சினிமாவின் மிக முக்கிய நடிகராக திகழ்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது “மலையன்குஞ்சு” என்ற படம் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் மும்முரமாக இயங்கி வருகிறார்.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் பகத்துடன் இணைந்து ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் இருந்த பொது இயக்குனர் லோகேஷுடன் கலந்துரையாடினார் பகத்.
அப்பொழுது லோகேஷ் இடம் பேசிய தொகுப்பாளர் நீங்கள் எப்பொழுது மறுபடியும் இனைவீர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில் நாங்கள் அடுத்த திரைப்படத்தில் ஒன்றாக இணைவோம் என்று கூறியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படம் என்றால் அது தளபதியின் 67 வது திரைப்படம் தான் ஆகையால் இந்த திரைப்படத்தில் பகத் பாஸில் கதாபாத்திரம் இருக்கும் என பலரும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
Video Courtesy – Behindwoods Ice