
உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற செஸ் விளையாட்டு போட்டி என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டியே. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் இதில் கலந்து கோலா எப்போதும் முனைப்புடனும் ஆர்வமுடனும் செயல்பட்டு வருவார்கள். முதல் முறை இந்த போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை 28ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் இந்த போட்டி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பான ஆயுத்த பணிகளில் தமிழக அரசு தீவிர முனைப்புடன் இறங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2020ஆம் நடவிருந்த போட்டி ரத்தனத்தால் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த போட்டி இப்பொது நடைபெறவுள்ளது. செஸ் விளையாட்டு வீரர்கள் மிகவும் கௌரவமாக பார்க்கும் இந்த விளையாட்டை மிக சிறப்பான முறையில் நடத்தி முடிக்க பல்வேறு வகையிலும் தமிழகஅரசு செயல்ப்பட்டு வருகிறது.

இந்திய செஸ் மேதை திரு. விஸ்வநாத் ஆனந்த் தலைமையில் இந்திய முழுவதிலும் இந்த போட்டிக்கான ஜோதி சுற்றி வந்து கொண்டிருக்குகின்றன. வருகிற ஜூலை 28ஆம் தேதி மிக பெரிய அளவில் ஒப்பனிங் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை இயக்கி கொடுக்க பிரபல இயக்குனர் விக்னேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்பொது ஏ.ஆர்.ரகுமான் இசையில், இந்த நிகழ்ச்சிக்காக பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு செஸ் விளையாட்டு போட்டிக்காக வருகை தரும் வீரர்களை வரவேற்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார். “Welcome to Chennai” என்ற இந்த பாடல் இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Video Courtesy – A.R.Rahman