சரக்கு மற்றும் சேவை வரியினை முறையாக செலுத்துவோருக்கு லாட்டரி பரிசு என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வருகிறது. நுகர்வோர் மனநிலை, வங்கிசாரா நிதியகத்தில் உள்ள குளறுபடிகள், பணப்புழக்கம் போதுமான அளவில் இல்லாதது போன்றவை மந்த நிலையின் படிநிலைகளாக இருக்கின்றன.
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுமார் 1.75 லட்சம் கோடி அளவிற்கு வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசு அந்த சரிவினை பல்வேறு தரப்பிலிருந்து வசூல் செய்ய தீர்மானித்துள்ளது.
பொதுவாக ஜி.எஸ்.டி வரியினை பெருவாரியாக கட்டுவது நடுத்தர வணிகர்களே. ஆனால் இவர்களுக்கு எந்தவிதமான சலுகையும் தற்போதைய பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
இந்நிலையில் ஜி.எஸ்.டி செலுத்துவோருக்கு லாட்டரி முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நேரடி மறைமுக வரி வாரியத்தின் இடைக்கால நிர்வாகி ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இந்த லாட்டரி முறையில் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரை பரிசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜிஎஸ்டி செலுத்திய ஒவ்வொரு ரசீதும், லாட்டரியில் பரிசு வெல்வதற்கான லாட்டரி டிக்கெட்டுகளாகக் கருதப்படும் என்று ஜோசப் தெரிவித்துள்ளார்.