24 ரன்கள் வித்தியாசத்தில் LSG அணியை வீழ்த்தி RR அணி அபார வெற்றி.

வெளியிட்டது

நேற்று இரவு நடைபெற்ற இரவு ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளும் இந்த போட்டியில் அதனை உறுதி செய்யும் முனைப்பில் விளையாடின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சாம்சன் 32 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னரே ஜெய்ஸ்வாலும் 41 ரன்களில்  ஆட்டமிழந்தார்.

24 ரன்கள் வித்தியாசத்தில் LSG அணியை வீழ்த்தி RR அணி அபார வெற்றி. 1

பின்னர் வந்த ரியான் பராக் 19, ஜிம்மி நிஷாம் 14, தேவ்தத் படிக்கல் 39, ரவிச்சந்திரன் அஸ்வின் 10, ட்ரெண்ட் பெல்ட் 17 என எடுக்க 20 ஒவர்களின் அந்த அணி 178/6 சேர்த்தது. லக்னோ அணியில் ரவி பிஷ்ணோய் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதனால் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்கார குயின்டன் டி காக் 7 ரன்களுடனும், ஆயுஷ் படோனி ரன்  ஏதும் இன்றியும் பெல்ட்டின் 2வது ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் ராகுலும் 10 ரன்களில்  ஆட்டமிழக்க 29/3 என அந்த அணி தடுமாறியது.

குருனால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா 4 விக்கெட்டிற்கு 65 ரன்கள் சேர்த்தனர். பாண்டியா 25 ரன்களில் அவுட்டாக , தீபக் ஹூடா தனது பங்கிற்கு 59 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக லக்னோ அணி 20 ஓவர்களில் 154/8 எடுத்து தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் அணியில் பெல்ட், ப்ரசித் கிருஷ்னா, மெக்காய் 2 விக்கெட்டுகளை விழித்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 2 இடத்தில் பிளே ஆஃப் சுற்றிற்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ளது. தோற்ற போதிலும் லக்னோ அணி 3வது இடத்தில இன்னும்  பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்