Categories: சினிமா

களத்தில் மோதும் அன்பு VS கெத்து..! லப்பர் பந்து படத்தின் வெறித்தனமான SNEAK PEEK இதோ..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவுக்குள் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பேராதரவினை பெற்றவர் தினேஷ். அட்டகத்தி பட வெற்றி இவரை முன்னணி நடிகராக சினிமாவில் உருவாக்கியது. பின்னர் தொடர்ந்து திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , விசாரணை என ஹிட் படங்களை கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

களத்தில் மோதும் அன்பு VS கெத்து..! லப்பர் பந்து படத்தின் வெறித்தனமான SNEAK PEEK இதோ..! 1

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் அண்மையில் ஜெ பேபி என்ற படத்தில் நடித்து இருந்தார். ஊர்வசி நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அட்டகத்தி தினேஷ் அசத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் அட்டகத்தி தினேஷ். தற்போது இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படத்தின் சான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் காளி வெங்கட்,தேவதர்ஷினி, பாலசரவணன் மற்றும் TSK நடித்து உள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்லாவே வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : PRINCE PICTURE

வெளியிட்டது

புதிய செய்திகள்