செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் நானே வருவேன். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது இந்த படம் குறித்து தற்போது விமர்சனங்களை பார்க்கலாம். படத்தின் ஒன்லைன் குறித்து பார்க்கும் பொழுது தனுஷ் இரட்டைப் பிறவியாவார். இதில் ஒருவர் வில்லனாகவும், மற்றொருவர் ஹீரோவாகவும் இருக்கிறார். சிறுவயதிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பின்னர் ஓர் அமானுஷ்ய சக்தியால் இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீது கதை.

இரட்டையர்கள் ஆக வரும் தனுஷின் பெயர்கள் கதிர் மற்றும் பிரபு. இதில் கதிர் தான் முரடன். பிரபு ஹீரோ. சிறு வயதிலேயே கதிர் சற்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் கதிர் அவரது அப்பாவையே கொன்று விடுகிறார். இதனால் கதிரை ஒரு இடத்தில் விட்டு விட்டு, பிரபுவுடன் அவரது அம்மா தனியாக சென்று விடுகிறார். பின்னர் பிரபு வளர்ந்து இந்துஜாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறது. பிரபுவும் தனது மகள் மற்றும் மனைவியுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மகள் வளர்ந்து திடீரென அவரிடம் சிறிது மாற்றம் காணப்படுகிறது. தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் பிரபு மன வேதனை அடைகிறார். பின்னர் தன் மகள் மீது ஆவி இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அப்போது அந்த ஆவி பிரபுவிடம் சில கோரிக்கைகளை வைக்கிறது. அதை செய்தால் தான் உனது மகளை விட்டுப் போவேன் என்றும் அந்த ஆதி கூறுகிறது. அந்த ஆவி சொன்னதை தனுஷ் செய்தாரா? ஆவியிடம் இருந்து தன் மகளை மீட்டாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

கொடி படத்திற்குப் பின்னர் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார். தனுஷின் நடிப்பை பற்றி சொல்லவே இல்லை தேவையில்லை. பிரபு கதிர் என இரண்டு கதாபாத்திரங்களையும் நல்ல வேறுபாடுடன் காட்டி சிறப்பாக நடித்துள்ளார் தனுஷ். தனுஷை தாண்டி இதில் வேறு யாருமே நடித்திருக்க முடியாது. தனி ஆளாக இருந்து இந்த முழு படத்தையும் தாங்கி இருக்கிறார் தனுஷ். தன் மகள் ஆவி பிடித்து அவர் கஷ்டப்படும் போது தனது தந்தையாக இவர் தவிக்கும் தவிப்பு நமக்கே பரிதாபத்தை வரவழைக்கிறது. மேலும் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஒரு தனுசாக மிகுந்த சாந்தமான கதாபாத்திரத்திலும், இன்னொரு தனுஷாக சைக்கோ கதாபாத்திரத்திலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார் தனுஷ்.

கதிராக வரும் தனுஷ் வில்லனாக மிரட்டி எடுத்துள்ளார். தன்னை வம்பிழுத்தவனை இரவு ஓட ஓட விரட்டிக் கொல்லும் காட்சிகள் திகிலை ஏற்படுத்துகிறது. தனுஷ் மகளாக நடித்தவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்றாலும், இரண்டாவது பாதி மெதுவாகவே நகர்கிறது. இன்டர்வல் காட்சிகளின் போது வரும் ட்விஸ்டை யாரும் எதிர்பாராத விதமாக அமைத்துள்ளார்கள். அதேபோல் கிளைமாக்ஸ்சும் செல்வராகவன் படங்களில் இல்லாதது போல் புதுவிதமாக அமைந்திருந்தது. திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் செல்வராகவன் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது ஏதோ ஆங்கில படத்தின் தகவல் போல் இருந்தது என்று சொல்லாமல், தனக்குரிய பாணியில் படத்தை நகர்த்திச் சென்று இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையும் பாடல்களும் மிக அருமையாக அமைந்திருந்தது. குறிப்பாக வீரா சூரா பாடல் வைத்த இடம் மிக அருமையாக இருந்த்து. பிஜிஎம் பல இடங்களில் வயிற்றில் புளியை கரைக்கிறது.

படத்தின் பாசிட்டி விஷயங்களாக பார்க்கப்படுவது. தனுஷின் நடிப்பு, விறுவிறுப்பான முதல் பாதி, இடைவேளையின் போது வரும் ட்விஸ்ட் மற்றும் பின்னணி இசை. படத்தில் நெகட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது இரண்டாம் பாதி மிக மெதுவாக செல்வதுதான். நானே வருவேன் திரைப்படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5