தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் சமீபத்தில் லடாக்கிற்கு பைக்கில் சென்று இருந்தார். அப்போது அங்கு பஞ்சர் ஆகி நின்ற ரசிகர் ஒருவரின் பைக்குக்கு பஞ்சர் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிப்பை தாண்டி அஜித்குமார் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ் என அனைத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். இவர் அடிக்கடி பைக் ரேஸ் செய்து அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அஜித் கடைசியாக நடித்த படம் வலிமை. மூன்று வருட காத்திருப்புக்கு பின்பு கடைசியாக வெளியான படம் தான் வலிமை. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

எனவே வலிமை பட இயக்குனருடன் மீண்டும் இணைந்து ஏகே 61 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதற்காக அவர் ஹைதராபாத்திற்கு அடிக்கடி ஷூட்டிங்கிற்கு சென்று வருகிறார். அந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அவருடன் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். மஞ்சுவாரியரும் அஜித்துடன் இணைந்து பைக் ரைடு சென்று இருந்தார். அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த மஞ்சு வாரியர் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் ரைடர் என பதிவிட்டு இருந்தார். தற்போது சென்னை திரும்பி இருக்கும் அஜித் படத்தின் மீதி ஷூட்டிங்கில் கலந்து கொள்வர் என தெரிகிறது. மேலும் படம் பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லடாக்கில் பஞ்சர் ஆகி நின்ற ரசிகர் ஒருவரின் பைக்குக்கு அஜித் குமாரே பஞ்சர் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அஜித்தின் எளிமையை பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Media2minutes