Categories: சினிமா

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். தந்தை மம்முட்டியை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என களம் இறங்கியவர்.தற்போது தந்தை அளவுக்கு இல்லை என்றாலும் தனக்கான அளவுக்கு ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார் துல்கர் சல்மான். மலையாள சினிமாவில் நாயகனாக கலக்கி வந்த இவர் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிய படம் ஓகே கண்மணி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் வரவேற்பு உருவாகி இருக்கும் நிலையில், மலையாளத்தில் இவர் எந்த படம் நடித்தாலும் அது தமிழிலும் வெளியாகி வருகிறது. அண்மையில் இவருக்கு வெளியான கிங் ஆப் கோத்தா மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இதன்மூலம் சினிமாவில் துல்கர் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது.

தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்து உள்ளார். கதாநாயகியாக மீனாட்சி சௌத்திரி இப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Embed Video Credits : ADITYA MUSIC TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்