Categories: சினிமா

உள்ளம் உருகி பாடும் வடிவேலு.! வித்தியாசமான மேக்கிங் வீடியோவை வெளியிட்ட மாமன்னன் படக்குழு.!

வெளியிட்டது

மாமன்னன் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நாளை படம் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகயுள்ள நிலையில் தற்போது படத்தின் முக்கிய காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை விளக்கி, வீடியோ ஒன்றை ரெட் ஜெயெண்ட் மூவிஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற சமூக சிந்தனை கொண்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்பி இருக்கும் வடிவேலு இந்த படத்தில் காமெடியனாக நடிக்காமல் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளம் உருகி பாடும் வடிவேலு.! வித்தியாசமான மேக்கிங் வீடியோவை வெளியிட்ட மாமன்னன் படக்குழு.! 1
இதனால் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. தேனி ஈஸ்வர் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது பிரபலங்களுக்காக மாமன்னன் ஸ்பெஷல் ஷோவை கமலஹாசன், தனுஷ் ஆகியோருக்கு திரையிட்டு காட்டி இருக்கின்றனர். படத்தை பார்த்த பின்பு ட்வீட் செய்திருக்கும் தனுஷ் இன்டெர்வல் இடைவேளைக்கு பிறகு தியேட்டர் எல்லாம் தெறிக்கப் போகிறது என்று வாழ்த்தி இருக்கிறார். அதேபோல படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கமலஹாசன் மனதார வாழ்த்தி இருக்கிறார். தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது கமலஹாசன் படத்தை நேரடியாக பார்த்து மாரி செல்வராஜை வாழ்த்தி இருப்பது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் நாளை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் படம் வெளியாக இருக்கிறது. தற்போது உருவான விதம் குறித்து மேக்கிங் வீடியோவை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” என்கிற பாடலை பாடுவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த மேக்கிங் வீடியோவில் முழுவதுமாக வடிவேலு அந்த பாடலை முழுவதுமாக மனமுருக பாட இந்த வீடியோ தற்போது நெகிழ்ச்சியுடன் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வடிவேலுவை பாராட்டி வருகின்றனர். அவரின் உள்ளத்தை உருக்கும் இந்த குரலால் இந்த வீடியோவை வேறு கட்டத்திற்கு எடுத்துச் சென்று விட்டதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Red Giant Movies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்