கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை.! எதிர் நீச்சல் சீரியலை விட்டு அதிரடியாக விலகிய நடிகர்.!

தன் கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று சொல்லி தற்போது எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் திடீரென விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த சீரியல் மக்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து தற்போது வரை கதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் ஆகிய இருவருக்கு இடையில் நடக்கும் பாச போராட்டத்தையும், மதுரையில் கூட்டுக்குடும்பமாக வாழும் அண்ணன் தம்பிகளின் கதைகளையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாகக் கொண்டு இந்த கதை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கதையை பொறுத்தவரை குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் ஆதிக்கமாக இருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு வரும் பெண்கள் வீட்டில் வேலைக்காரர்கள் போல் நடத்தப்பட்டு வருகிறார்கள்.

கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை.! எதிர் நீச்சல் சீரியலை விட்டு அதிரடியாக விலகிய நடிகர்.! 1
குடும்பத்தின் நிலைமை இப்படி இருக்க இந்த குடும்பத்திற்கு கடைசி மருமகளாக வரும் ஜனனி, வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை வருகிறது. ஜனனியை பார்த்து மற்ற பெண்களும் தங்களது உரிமைக்காக போராடுகிறார்கள். தற்போது இந்த சீரியலின் கதைப்படி அருணுக்கும் ஆதிரைக்கும் திருமணமாகும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் கரிகாலன் மற்றும் ஆதிரைக்கு திருமணம் நடந்து விட்டது. மற்றொருபுறம் அருண் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஜனனி எப்படியாவது ஆதிரையை காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். ஆதிரை கரிகாலுடன் இணைந்து வாழ்வாரா? இல்லை மீண்டும் அருணுடன் திருமணம் நடக்குமா? குணசேகரனின் திட்டம் நிறைவேறுமா? என்று பல அதிரடி திருப்பங்களுடன் இந்த நாடகம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த நாடகத்திலிருந்து நடிகர் ஒருவர் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இன்னும் எவ்ளோ தான் இவுங்களும் கஷ்ட பாடுவாங்க!!!மழையில் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி கீழே விழுந்த ரஷிதா!!!

கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை.! எதிர் நீச்சல் சீரியலை விட்டு அதிரடியாக விலகிய நடிகர்.! 3

இந்த சீரியலில் எஸ்கேஆர் இன் கடைசி தம்பியாக நடிகர் மது கார்த்திக் என்பவர் நடித்து வருகிறார். தற்போது இவர் தான் இந்த சீரியல் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதாலும் இவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பதில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment