பிரபல யுடியூபர் ஆக வலம் வருபவர் இர்பான். பல உணவுகளை அருந்தி அதனை விமர்சனமாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள உணவுகளை ருசித்து வீடியோ வெளியிட்டு மிகபெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளார். யூடியூபில் மட்டும் வீடியோ வெளியிட்டு வந்த இவர் தற்போது சினிமாவிலும் சிறு சிறு காட்சிகளில் தோன்றி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுவரை உணவு மட்டும் சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு வந்த இர்பான், தற்போது முதல் முறையாக சமையல் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல உணவுகளை சமைத்து ரசிகர்களையும் நடுவர்களையும் அசத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது இவர்களுக்கு குழந்தை பிறந்து உள்ளது.

தனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளதாக இர்பான் அறிவித்து உள்ளார். மேலும் தான் என்ன புண்ணியம் செய்தேன் என தெரியவில்லை, இப்படி எனக்கு மகிழ்ச்சி நடந்து இருப்பதாகவும், அவரது மனைவிக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் வெளியிட்டு உள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது.
View this post on Instagram