விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIK படத்தின் First Look போஸ்டர் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். நடிகர் சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகியவர். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் படம் மாபெரும் ஹிட் அடித்து விக்னேஷ் சிவனை முன்னணி இயக்குனர் ஆக்கியது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIK படத்தின் First Look போஸ்டர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இவர் நடிகர் அஜித்தை வைத்து லைக்கா தயாரிப்பில் மிகப்பெரிய படத்தினை இயக்க இருந்தார். ஆனால் அந்தப்படத்தை லைக்கா நிறுவனம் கைவிட்டு விட்டது. நீண்ட நாட்களாக தயாரிப்பாளர் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன் தற்போது புது கதையுடன் செவென் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த கதை தயாரிப்பாளருக்கு பிடித்து போகவே தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து லைப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தினை இயக்கி உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIK படத்தின் First Look போஸ்டர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் விக்னேஷ் சிவன் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் போஸ்டரில் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்து வந்தனர்.

விளம்பரம்

Leave a Comment