“சத்தமில்லாமல் காதல் கணவரை கரம் பிடித்த அவன் இவன் நடிகை மது ஷாலினி”!! திருமணம் முடித்து இன்ஸ்டாகிராமில் காதல் கணவருடன் பதிவு!!

வெளியிட்டது

"சத்தமில்லாமல் காதல் கணவரை கரம் பிடித்த அவன் இவன் நடிகை மது ஷாலினி"!! திருமணம் முடித்து இன்ஸ்டாகிராமில் காதல் கணவருடன் பதிவு!! 1

’பழனியப்பா கல்லூரி’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகமானவர் நடிகை மது ஷாலினி. அதன் பின்னர் நடிகர் சிவாவுடன் “பதினாறு” என்ற படத்தில் நடித்து இருந்தார். இருப்பினும் அதன் பின் சில படங்களில் அடித்து வந்தார். இருப்பினும் சிறப்பான கதாபாத்திரங்களும், பெரிய வெற்றி படங்களும் அமையவில்லை. அப்போது தான் இவர்க்கு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் பாடகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஷால், ஆர்யா என இரு கதாநாயகர்கள் நடித்த இந்த படத்தில் இவர் ஒரு டுடோரியல் காலேஜ் படிக்கும் பெண்ணாக ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் இவர்க்கு பெரிய பாராட்டுகள் ஏதும் கிடைக்காமல் போயின. இருப்பினும் மக்களிடேயே மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு நாயகையாக அறிமுகமானர்.

அதன் பின் மற்ற மொழி பாட வாய்ப்புகளும் அமைய கிடைக்கும் படங்களில் எல்லாம் சிறப்பாக நடித்து வந்தார். நடுவில் உலகநாயகன் கமல்ஹாசன், திரிஷா  நடித்த “தூங்காவனம்” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. சமீபத்தில் வெளியான ஆர்கே சுரேஷின் ’விசித்திரன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிபிராஜ் நடித்துள்ள ரேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவரை மதுஷாலினி திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் நடந்த இந்த திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்னுடைய திருமண வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது சமூக வலைத்தளத்தில் மதுஷாலினி நன்றியை தெரிவித்துள்ளார்.

’சென்னை டு சிங்கப்பூர்’ ’திட்டம் இரண்டு’ நடுவன்’ உள்ள பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் கோகுல் ஆனந்த், ‘பஞ்சராக்‌ஷரம்’ என்ற படத்தில் நடித்தபோது மதுஷாலினியுடன் காதல் ஏற்பட்டது என்பதும் தற்போது இந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை மதுஷாலினிக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்