என் வாழ்வை உன் அன்பினால் நிரப்புகிறாய், லவ் யூ அம்மு.! கணவர் ரவீந்தர் பற்றி மஹாலக்ஷ்மி போட்ட பதிவு

வெளியிட்டது

தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் நேற்று திடீரென திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. சத்தம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இது குறித்து விரைவில் என் மனைவியுடன் லைவில் பேசுவேன் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் அறிவித்திருந்தார். நட்புனா என்னனு தெரியுமா?, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவர் தயாரிப்பாளராக பலருக்கும் அறிமுகமான போதும், பிக்பாஸை விமர்சித்து மிகப் பிரபலமானார். குறிப்பாக பிக்பாஸ் சீசன்3-ஐ கடுமையாக விமர்சித்தார். அதற்கு முக்கிய காரணம் வனிதா தான். வனிதா வீட்டில் செய்யும் சண்டைகளை வைத்து இவர் வெளியில் விமர்சனங்கள் செய்து கொண்டிருந்தார். பிக்பாஸில் இருந்து வனிதா வெளியேறிய பிறகு இவருக்கும் வனிதாவிற்கும் நேரடி சண்டைகளை நடந்தன.

என் வாழ்வை உன் அன்பினால் நிரப்புகிறாய், லவ் யூ அம்மு.! கணவர் ரவீந்தர் பற்றி மஹாலக்ஷ்மி போட்ட பதிவு 1

குறிப்பாக வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. ஆதலால் வனிதா செய்வது தவறு என்றும் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு நியாயம் வேண்டுமென்றும் தொடர்ந்து ரவீந்தர் பேசி வந்தார். இதனால் கடுப்பான வனிதா அடுத்தவர்கள் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று ரவீந்தருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். நிலைமை இப்படி போய்க் கொண்டிருக்க ஒரு நாள் திடீரென்று வனிதாவும், ரவீந்தரும் லைவ்வில் மோதிக் கொண்டனர். பின்னர் எந்தவித சர்ச்சைகளிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார் ரவீந்தர். இந்த நிலையில் நேற்று திடீரென சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்து இருந்தார். வாழ்க்கையில் மகாலட்சுமி வந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அந்த மகாலட்சுமியே வாழ்க்கையாக கிடைத்தால் என்று தனது மனைவியுடன் திருமணமான புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

மகாலட்சுமி ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். இவர் விஜேவாக ஆரம்பித்து பின்னர் சீரியலில் நடித்த தொடங்கினார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. பின்னர் ஜீ தமிழில் ஒரு தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த கதாநாயகனாக நடித்த ஈஸ்வருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. ஈஸ்வரின் மனைவி ஈஸ்வர் மீதும் மகாலட்சுமி மீதும் போலீசில் புகார் அளித்தார். அந்த பிரச்சினைகள் எல்லாம் சிறிது நாட்களுக்குப் பின் ஓய்ந்தது. தற்போது மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான பின்பு முதன் முறையாக பதிவிட்டுள்ளார். உங்களை வாழ்க்கையில் பெற்றதற்கு நான் ஒரு அதிர்ஷ்டசாலி, நீங்கள் என் வாழ்க்கையை காதலினால் நிரப்புவீர்கள், லவ் யூ அம்மு என்று பதிவிட்டுள்ளார்.

Youtube Video Code Embed Credits: AvalGlitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்