கடந்த இரண்டு வாரங்களாக சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திதான் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம். முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னனு தெரியுமா போன்ற சில படங்களை தயாரித்தவர் ரவீந்திரன். இவர் பிக்பாஸ்-ன் பொழுது அன்றைய நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்து அதன் மூலமாக பிரபலமானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் தனக்கும் சின்னத்திரை நடிகை மகாலெட்சுமிக்கும் திருமணம் முடிந்து விட்டதை பகிர்ந்து இருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. பலரும் இவர்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். சிலர் இவர்களின் உருவத்தை வைத்து கேலியும் செய்து வந்தனர். ரவீந்திரன் திருமணம் செய்த மகாலட்சுமி ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, தற்போது நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர்கள் திருமணம் குறித்து பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் ரவீந்திரன் கூறும் பொழுது நட்புனா என்னனு தெரியுமா படம் தயாரித்துக் கொண்டிருந்தபோது தனக்கும் தனது முதல் மனைவிக்கும் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டதாகவும், பின்னர் மகாலட்சுமியை பார்த்த பின்பு தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

ஒன்றரை வருடங்களாக தாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், ஆரம்பத்தில் நான் காதலை சொன்னபோது மகாலட்சுமி ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் இருக்கிறான் என்று பதிலளித்து ரவீந்தரின் காதலை ஏற்க மறுத்திருக்கிறார் மகாலட்சுமி. பின்னர் எப்படியோ சமாதானம் செய்து மகாலட்சுமியின் காதலை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். தனக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைத்து விட்டு வந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார் ரவீந்திரன், ஆனால் அதெல்லாம் தேவையில்லை என்று ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார் மகாலட்சுமி.

மகாலட்சுமி கூறும் போது பணத்திற்காக இவரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் பேசுகின்றனர். தனது தந்தை ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன், பாகுபலி போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக இருப்பவர். மேலும் தானும் பல நாடகங்கள் மற்றும் படங்களின் நடிப்பதால் தனது மாத வருமானம் மட்டுமே மூன்று லட்சம் வரை கிடைக்கும் என்னால் யாருடைய துணையும் இன்றி தனியாக ஒரு வாழ்க்கையை வாழ முடியும். பணத்திற்காக நான் திருமணம் செய்யவில்லை. அவரின் மனதை பார்த்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்று விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Avalglitz