விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நிவின் மற்றும் நந்தினி இருவரின் திருமணமும் நின்றுவிட்டது. நிவினை அவரது தாயார் அழைத்துக் கொண்டு சென்றுவிட தற்போது ராகினி கீழே விழுந்து கதறி அழுது கொண்டிருக்கிறார். இதனால் பசுபதி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் நான்கு சகோதரிகளின் கதை என்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது மகாநதி சீரியல். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் நிவினுக்கும் தனது மகள் நந்தினிக்கும் திருமணத்தை நடத்தி வைக்க பசுபதி ஏற்பாடு செய்கிறார். ஆனால் பசுபதி காவிரியின் அப்பாவை ஏமாற்றி வாங்கிய தோட்டம் குறித்து காவிரி ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். இதனால் பசுபதியை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு இடையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் நந்தினியின் அம்மா இந்த கல்யாணம் நடக்குமா இல்லையா என்று பசுபதியிடம் கேட்கிறார்.

அதற்கு பசுபதி இந்த திருமணம் நடக்கும் என்று சொல்லி நிவினை கட்டாயப்படுத்தி தள்ளிவிட்டு போய் உட்கார் என்று கூறுகிறார். இதனால் கோபமடைந்த நிவினின் அம்மா ஜெயா மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என்று பசுபதியை திட்டுகிறார். பின்னர் இந்த திருமணம் நடக்காது என்று சொல்லிவிட்டு நிவினை அழைத்துக் கொண்டு ஜெயா சென்று விடுகிறார். இதனால் நந்தினி மாலைகளை எறிந்துவிட்டு கீழே விழுந்து அழுகிறார். இந்த திருமணம் நடக்காமல் போனதற்கு காவிரி தான் காரணம், அவளை சும்மா விடக்கூடாது என்று சொல்லி பசுபதி மனதிற்குள் திட்டம் போடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television